சென்னை:டில்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப் பட்ட தமிழக அலங்கார ஊர்தி தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது இடம் பெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
![]()
|
இது குறித்து தமிழக முதல்வர் கூறி இருப்பதாவது:
டில்லி குடியரசு தினவிழாவில்நிராகரிக்கப் பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்தில்எந்த வித காரணங்களும் குறிப்பிடப்படவில்லை.
வேலூர்புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தொடக்கமாகும்.
ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் வீரத்தாய் வேலு நாச்சியார். வேறு எந்த மாநிலத்திற்கும் சளைக்காத வகையில் விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலை போரில் தமிழகத்தின் தொடர் பங்களிப்பு வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
![]()
|
தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு அலங்கார ஊர்தி கொண்டு சென்று மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். விடுதலைப்போரட்ட தியாகிகளின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. கோயம் பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்படும். விடுதலைப்போரில் தமிழ்நாடு என்ற புகைப்பட கண்காட்சி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார் .
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement