வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதனால் காங்., மத்திய மோடி அரசு மீது விமர்சனம் முன்வைத்துள்ளது.
![]()
|
சமீபத்தில் அமலாக்கத்துறை பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டது. பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாஜ., அரசு திட்டமிட்டு இந்த சோதனையை நடத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
![]()
|
சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாபின் முதல் தலித் முதல்வர் ஆவார். இதனை முன்னிட்டே அவரை அவமதிக்கும் வகையில் மத்திய பாஜ., அரசு செயல்படுகிறது என்றும் வரவிருக்கும் தேர்தலில் பாஜ.,வுக்கு காங்கிரஸ் தனது வெற்றியின் மூலமாக பதிலடி கொடுக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது. முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவித்த பஞ்சாப் ஆம் ஆத்மியும், முதல்வர் சரண்ஜித் சிங்கை விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரசிலிருந்து விலகினார். பின்னர் புதுக் கட்சி துவங்கிய அவர் பாஜ.,வுடன் கூட்டணி அமைத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.
![]()
|
இதனை அடுத்து காங்கிரஸ் தலைமை சரண்ஜித் சிங்கை பஞ்சாபின் புதிய முதல்வராக நியமித்தது. கடந்த ஓராண்டாக முதல்வர் பதவி வகித்த சரண்ஜித் சிங் கட்சி வட்டாரத்தில் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார். தற்போது ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ., உள்ளிட்ட மூன்று கட்சிகள் பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில் காங்கிரஸ் தனது கடந்தகால ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement