ஜன., 19, 1933
நாகை மாவட்டம் சீர்காழியில், 1933 ஜன., 19ல் பிறந்தவர், எஸ்.கோவிந்தராஜன். சென்னை இசைக் கல்லுாரியில் பயின்றார். தன், 19வது வயதிலேயே, 'சங்கீத வித்வான், இசைமணி' ஆகிய பட்டங்களை பெற்றார். தேவி நாடக சபாவில், நடிகராக பாடி, நடித்தார். 'சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தில் துணை நடிகராக சேர்ந்தார்.கடந்த 1953ல் வெளியான, பொன் வயல் படத்தில், 'சிரிப்புத் தான் வருகுதைய்யா...' என்ற பாடல் வாயிலாக, பின்னணி பாடகராக சினிமாவில் அறிமுகமானார். சினிமா பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான பக்தி பாடல்கள் பாடி உள்ளார். மொத்தம், 16 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.பல்வேறு நாடுகளில், இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். சில படங்களில் நடித்துள்ளார். சென்னை தமிழிசை கல்லுாரியின் முதல்வராக பணியாற்றினார். 30க்கும் மேற்பட்ட விருதுகள்பெற்றுள்ளார். 1988 மார்ச் 24ல் தன் 55வது வயதில் காலமானார்.சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE