பொள்ளாச்சி:மாடுகள் கருப்பிடிக்காமல் போவதை தவிர்க்க, விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் சிறு, குறு விவசாயிகளின் முக்கிய உபதொழிலாகவும், வாழ்வாதாரகவும் மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி உள்ளது.பசு மாடு உரிய தருணத்தில் சினையாகி, கன்று ஈன்று பால் கொடுத்தால் மட்டுமே வருவாய் ஈட்ட முடியும். சினைப்பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டால், அது விவசாயிகளின் வருவாயை பாதிப்பதுடன், மாடு பராமரிப்பு வருவாயற்ற செலவாகவும் மாறி விடுகிறது.சினைப்பிடிக்காமல் போவதற்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றுநோய், பிறவிக்கோளாறு உள்ளிட்டவை காரணங்களாக இருக்கும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.பசு மாடுகளில் சினைப்பருவச் சுழற்சியானது, 18 - 21 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது. சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். சினை ஊசி போடுவதோ, காளை உடன் சேர்ப்பதோ அப்பருவதில் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.ஆறு மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம், புரதம், கனிமம் மற்றும் வைட்டமின்கள் குறைபாடு இருந்தால், தேவையான கூடுதல் உணவுகள் கால்நடை மருத்துவர் பரிந்துரைப்படி அளிக்க வேண்டும்.இவ்வாறு கவனமாக பராமரித்தால், பருவத்துக்கு கன்று ஈன்று, மாடுகள் வருவாய் ஈட்டுவதில் உதவியாக இருக்கும்.இவ்வாறு, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE