பொள்ளாச்சி:பொள்ளாச்சி - திண்டுக்கல்அதிவிரைவுச் சாலை பணிகளில், ஒப்பந்ததாரர் தரப்பின் அலட்சியம் காரணமாக நிலவிய பாதுகாப்பு குறைபாடுகள், 'தினமலர்' செய்தி எதிரொலியாக சரி செய்யப்பட்டுள்ளன.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், கடந்த, 2018ல், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு நான்கு வழி அதிவிரைவு சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தில், போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்கும் வகையில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு, 3,649 கோடி ரூபாய். திட்ட பணிகள் கடந்த, 2019 மார்ச் மாதம் துவங்கியது.தற்போது, பொள்ளாச்சி புளியம்பட்டி அருகே, பல்லடம் ரோட்டை கடக்கும் பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு, ரோட்டோர மரங்களை வெட்டி, போக்குவரத்துக்கு இடையூறாக போட்டும், முறையாக எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்காமலும் பணி மேற்கொள்வதால், விபத்து அபாயம் நிலவுவதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தியின் எதிரொலியாக, ரோட்டோரம் போட்டு வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு, எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், விபத்து அபாயம் நீங்கியுள்ளதாக மக்கள் நிம்மதி தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE