வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-:''முந்தைய காங்., ஆட்சியில் 'தேவாஸ் மல்டிமீடியா' நிறுவனத்திற்கு சொற்ப கட்டணத்தில் அகண்ட அலைவரிசையை ஒதுக்கி மோசடி செய்திருப்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ், 2005ல் 'எஸ் பேண்டு' அகண்ட அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
ஆனால் 2011ல் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நடந்த மோசடி காரணமாகவும், தேசப் பாதுகாப்பு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு எஸ் பேண்டு அலைவரிசை தேவைப்படுவதாக கூறி, தேவாஸ் - ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ![]()
|
இதை எதிர்த்து தேவாஸ் நிறுவனம், மொரீஷியஸ் முதலீட்டாளர்கள், டச்சு டெலிகாம் நிறுவனம் ஆகியவை சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ளன. இந்த வழக்குகளில் மத்திய அரசு இழப்பீடாக 9,675 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'மோசடி திட்டத்துடன் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு சொற்ப தொகைக்கு அகண்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரியே' என, தீர்ப்பளித்தது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.18) செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'மோசடி திட்டத்துடன் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு சொற்ப தொகைக்கு அகண்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரியே' என, தீர்ப்பளித்தது.
கடந்த 2005ல் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு சொற்ப தொகைக்கு அகண்ட அலைவரிசை ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது, இந்திய மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் எதிராக செய்த மோசடி ஒப்பந்தம். மோசடி நோக்கத்துடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரியே என, உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
முந்தைய காங்., ஆட்சியின் அலங்கோலங்களால் வரி செலுத்துவோரின் பணத்தை காக்க, மத்திய அரசு ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் போராடி வருகிறது. இல்லையெனில் தேவாஸ் போன்ற மோசடி வழக்குகளில் இழப்பீடாக வரி செலுத்துவோரின் பணத்தை தந்திருக்க நேர்ந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement