தொற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,000த்தை கடந்தது

Added : ஜன 18, 2022 | |
Advertisement
உடுமலை:தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து, 600ஐ கடந்து பதிவு ஆவதால், திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்களின், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 3,000த்தை கடந்தது.தற்போது கொரோனா பரவலால், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளால், தடுப்பூசி பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.வாரம் தோறும், மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

உடுமலை:தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து, 600ஐ கடந்து பதிவு ஆவதால், திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்களின், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 3,000த்தை கடந்தது.தற்போது கொரோனா பரவலால், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளால், தடுப்பூசி பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.வாரம் தோறும், மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தை சேர்ந்த, 2,888 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.கடந்த, 15ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக தினசரி பாதிப்பு, 600ஐ கடந்து பதிவு ஆவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 3,237 ஆக உயர்ந்தது. தற்போது, மாவட்டத்தில் மொத்தம், ஒரு லட்சத்து, 3 ஆயிரத்து 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நேற்றுமுன்தினம், 256 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில், 98 ஆயிரத்து, 743 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தை சேர்ந்த, 1,031 பேர் தொற்றால் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X