பழநி பாத யாத்ரீகர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் சேவை

Added : ஜன 18, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:வெளியூர்களில் இருந்து பொள்ளாச்சி வழியே, பழநிக்கு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு, தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மருத்துவ சேவை வழங்கி உதவினர்.தைப்பூசமான நேற்று, பல்வேறு ஊர்களில் இருந்து, கோவை ரோடு வழியே பொள்ளாச்சியை கடந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழநி முருகனை தரிசிக்க பாத யாத்திரையாக சென்றனர். நீண்ட துாரம் பாத யாத்திரையாக வருவதால், கால்களில்
 பழநி பாத யாத்ரீகர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் சேவை

பொள்ளாச்சி:வெளியூர்களில் இருந்து பொள்ளாச்சி வழியே, பழநிக்கு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு, தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மருத்துவ சேவை வழங்கி உதவினர்.தைப்பூசமான நேற்று, பல்வேறு ஊர்களில் இருந்து, கோவை ரோடு வழியே பொள்ளாச்சியை கடந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழநி முருகனை தரிசிக்க பாத யாத்திரையாக சென்றனர். நீண்ட துாரம் பாத யாத்திரையாக வருவதால், கால்களில் கொப்பளம் ஏற்படுவது, ரத்தம் கட்டிக் கொள்வது, உடல் அசதி, தசைப்பிடிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படுகின்றனர்.அவர்களுக்கு சேவை வழங்கும் விதமாக, ஆச்சிபட்டி ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் முன், குள்ளக்காபாளையம் தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் சவுடேஸ்வரி இளைஞர் நலச்சங்கம் சார்பில் முகாம் நடந்தது.காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை அவ்வழியே பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு, கால்களுக்கு மருந்துகள் தடவியும், வலிநிவாரணிகள் கொடுத்தும் மருத்துவ சேவையாற்றினர்.மேலும், இளைப்பாற பந்தலிட்டு, குடிப்பதற்கு மூலிகை குடிநீர், நீர்மோர், சுக்கு டீ வழங்கினர். முகாமில், களைப்புடன் வந்த பழநி பாத யாத்ரீகர்கள், இளைப்பாறி, வலிக்கு நிவாரணம் பெற்றுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X