சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'‛சுய கட்டுப்பாட்டை பெண்கள் இழந்துடுறாங்க!'

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (3)
Advertisement
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டமான, 'போக்சோ' குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருபவரும், நன்னிலம் காவல் துறை ஆய்வாளருமான சுகுணா: பிறந்த குழந்தையை அனாதையாக விட்டுச் செல்வோர் பட்டியலில் முதலில் வருபவர், காதலர்களை நம்பி, அவர்களிடம் திருமணத்திற்கு முன்பும், திருமண வயதை எட்டாத நிலையிலும் உடலுறவு
சொல்கிறார்கள்

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டமான, 'போக்சோ' குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருபவரும், நன்னிலம் காவல் துறை ஆய்வாளருமான சுகுணா: பிறந்த குழந்தையை அனாதையாக விட்டுச் செல்வோர் பட்டியலில் முதலில் வருபவர், காதலர்களை நம்பி, அவர்களிடம் திருமணத்திற்கு முன்பும், திருமண வயதை எட்டாத நிலையிலும் உடலுறவு வைத்துக் கொள்வோர் தான். குழந்தை உண்டாகி அது வெளியில் தெரிந்தால் சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்திற்காக கருவுற்றது தெரியாமல், அதைக் கலைக்க நினைத்து, மருத்துவர்களிடம் போகின்றனர்.
நாள் கடந்த நிலையில் அவர்கள் வரும்போது, உயிருக்கு ஆபத்தாகி விடும் என மருத்துவர்கள் அறிவுரை கூறிய பின், வேறு வழியின்றி வெளி ஊருக்குச் சென்றோ, ஊரிலேயே யாருக்கும் தெரியாமலேயோ சிசுவை வளர்த்து, குழந்தை பிறந்த பின், துாக்கி வீசிவிட்டு, வீடு திரும்பி விடுகின்றனர். காதலனோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாது, சமுதாயத்துக்கு தெரிந்தால் தனக்கு அவமானம் என நினைத்து, இப்படி செய்து விடுகின்றனர்.விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் கொண்ட பெண்கள் கர்ப்பமாகி விட்டால், இந்தச் செயலை செய்து விடுகின்றனர்.சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்காது என்று நினைப்பதாலும், குழந்தை உண்டாகியிருப்பதை தாமதமாக அறிந்து, அதை அழிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்போதும், குழந்தையைப் பெற்றெடுத்த பின், துாக்கிப் போட்டு விடுகின்றனர்.சில சம்பவங்கள் தான் வெளியில் தெரியும்; பல சம்பவங்கள் வெளியில் தெரியாமலேயே மறைக்கப்பட்டு விடும்.

இதற்கு முதல் காரணம், பெண்கள் சுய கட்டுப்பாட்டை இழப்பது தான். 'செக்ஸ்' குறித்தான முழுமையான விழிப்புணர்வை சிறு வயது மற்றும் மாணவப் பருவத்தில் இருந்தே ஏற்படுத்த வேண்டும்.நமக்கு எப்போது செக்ஸ் தேவைப்படுகிறது, நாம எப்போது அதற்கு தயாராகிறோம், நம் உடல் நிலை எப்போது தயாராகிறது என, கல்வி சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கொடுக்கும்போது, எதிர்காலத்தில் அவர்கள் அந்த கல்வியைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.பள்ளி, கல்லுாரிகளில், செக்ஸ் குறித்த பாடத்தை உருவாக்கி, விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்; அப்போது தான் இது போன்ற தவறுகளைக் களைய முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-ஜன-202215:51:08 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பாடங்களை சொல்லி கொடுத்தால் தவறு குறைய வாய்ப்பில்லை. ஒதுக்கமே மேன்மை தரும் வயதான காலத்தில் என்ன மதிப்பு என குழந்தைகள் அறிய உதவ வேண்டும்
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
19-ஜன-202210:55:25 IST Report Abuse
Gandhi தேவாரமும் திருவாசகமும் பண்படுத்திய என் தமிழ் இனம் இன்று சீர்கெட்டத்திற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தமிழனுக்கு டாஸ்மாக் தமிழச்சிக்கு சீரியல் என்று தமிழ் குடும்பங்களை நாசமாக்கி விட்டார்கள்.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
19-ஜன-202204:40:04 IST Report Abuse
venkates எல்லா குற்றங்களுக்கும் உடனடியாக மிக கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X