பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து? உளவுத்துறை எச்சரிக்கை

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
புதுடில்லி: குடியரசு தின விழாவைக் கொண்டாட நாடு தயாராகி வரும் நிலையில், 'பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 73-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள்
 பிரதமர் மோடி, உயிர், ஆபத்து, உளவுத்துறை, எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குடியரசு தின விழாவைக் கொண்டாட நாடு தயாராகி வரும் நிலையில், 'பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 73-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டில்லியில் நடக்கும் விழாவில் வெளிநாட்டு தூதர்கள், சிறப்பு விருந்தினர்கள் என குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அணிவகுப்புபுதுப்பிக்கப்பட்டுள்ள ராஜபாதையில் நடக்கும் முதல் குடியரசு தின விழாவாக இது அமைய உள்ளது. முப்படைகளின் வலிமை, நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் அணிவகுப்பு நடக்க உள்ளது.கொரோனா பரவலால் கடந்தாண்டை போலவே சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் இந்த முறையும் கலந்து கொள்ளவில்லை.
அதனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.இதற்காக டில்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டில்லி போலீசாருடன், துணை ராணுவப் படையினர், ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒன்பது பக்க அறிக்கையை உளவுத் துறை அனுப்பி வைத்துள்ளது.அச்சுறுத்தல்அதில் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல முக்கிய நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - -இ- - தொய்பா, ஜெய்ஷ்- - இ- - முகமது, ஹர்கத்- - உல்- - முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. பிரதமர் செல்ல வேண்டிய சாலையில் திடீரென சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பிரதமர் மோடி பாதி வழியிலேயே திரும்பினார். இந்த சம்பவத்துக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த சீக்கியருக்கு நீதி என்ற காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றது.பாதுகாப்பு


தற்போது உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால் குடியரசு தினம் மற்றும் சட்டசபை தேர்தல்களை சீர்குலைக்கும் வகையில், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவு அளித்து வருவதாகவும் உளவுத் துறை கூறியுள்ளது. பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிய அதிரடிப் படை அமைப்பு
டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் அல்லது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினால் உடனடியாக களமிறங்கும் வகையில் 50 வீரர்கள் அடங்கிய க்யூ.ஏ.டி., எனப்படும் உடனடி நடவடிக்கை குழு எனப்படும் அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜம்மு - காஷ்மீர் மற்றும் நக்சலைட் பிரச்னைகள் உள்ள சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் அடங்கியது இந்தக் குழு.இந்நிலையில் தலைநகர் டில்லியின் பாதுகாப்புக்காக தனி அதிரடிப் படை குழுவை சி.ஆர்.பி.எப்., அமைத்துள்ளது. சிறப்பான பயிற்சி பெற்ற 50 இளம் வீரர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 'பயங்கரவாத சம்பவம் நடந்தால் அடுத்த சில நிமிடங்களில் களமிறங்கும் வகையில் இந்தக் குழு எப்போதும் தயார் நிலையில் இருக்கும்' என, மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.குடியரசு தினத்தையொட்டி டில்லியின் பாதுகாப்பு பணியில் இந்தக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


'ட்ரோன்'களுக்கு தடைகுடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா நேற்று வெளியிட்ட அறிக்கை:குடியரசு தின விழாவில் பொது மக்கள், விருந்தினர்கள் மற்றும் முக்கிய கட்டடங்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

எனவே வரும் 20 முதல் அடுத்த மாதம் 15 வரை டில்லியில் பாரா கிளைடர்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள், ராட்சத பலுான்கள் உள்ளிட்ட அனைத்து விதமான சிறிய ரக பறக்கும் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P RAMESH KUMAR - balasore,இந்தியா
19-ஜன-202221:22:46 IST Report Abuse
P RAMESH KUMAR UP தேர்தல் வருதுல அது வரைக்கும் உயிருக்கு ஆபத்து இருக்கத்தான் செய்யும் அதுக்கப்பறம் வேற மாநில தேர்தல் வரைக்கும் ஒன்னும் இருக்காது மறுபடி தேர்தல் வந்தா மறுபடியும் உயிருக்கு ஆபத்து வந்துரும் அரசியல இதெல்லல்லாம் சாதாரணமப்பா
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜன-202221:14:31 IST Report Abuse
S. Narayanan பிரதமர் மோடி அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க படவேண்டியது இந்திய அரசின் கடமை.பிரதமரின் நிகழ்ச்சி நிரல் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அதில் எந்த தொய்வும் இருக்க கூடாது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
19-ஜன-202219:47:16 IST Report Abuse
konanki மோடிக்கு சாமான்ய மக்களால் _இந்தியாபாகிஸதான் சீனா _உட்பட ஆபத்து இல்லை. இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சாமான்ய மக்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திலிருந்து எங்கள் மை மோடி காப்பற்ற வேண்டும் என அறை கூவல். வட இந்திய ஊடகங்கள் இதை காட்டியது. தமிழக PIMPS இதை காண்பிக்காது.மோடிக்கு ஆபத்து உள்ளூர் மற்றும் வெளியூர் மத தீவிர தீவிரவாதிகளிடமிருந்து தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X