லண்டன் சொகுசு பங்களாவை விட்டு வெளியேற மல்லையாவுக்கு கோர்ட் உத்தரவு

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி: ' லண்டன் சொகுசு பங்களா மீது வாங்கிய வங்கி கடனை திருப்பி செலுத்தாததால், பங்களாவை விட்டு வெளியேற விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா 64, இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், 2016ல் பிரிட்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா
Vijay Mallya, London Home, UK court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ' லண்டன் சொகுசு பங்களா மீது வாங்கிய வங்கி கடனை திருப்பி செலுத்தாததால், பங்களாவை விட்டு வெளியேற விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா 64, இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், 2016ல் பிரிட்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கு விசாரணையில் உள்ளது.


latest tamil news



இந்நிலையில், லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ. 185 கோடி, கடன் பெற்றிருந்தார். 5 ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால், 2017-ல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது.


இதையடுத்து சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா, வெளியேறுமாறு கடந்தாண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், லண்டன் சொகுசு பங்களாவை விட்டு மல்லையா, குடும்பத்தோடு வெளியேற வேண்டும், அதை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-ஜன-202219:16:26 IST Report Abuse
M  Ramachandran பல மோசடிகளுக்கு மூல காரண கர்த்தா ப சி. ஏன் இந்த ஆள் ஜாமீனை நீதி மன்றம் இன்னும் கான்சல் செய்யாமல் இருக்கிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-ஜன-202219:14:08 IST Report Abuse
M  Ramachandran இந்த ஜென்மம் ப சி ஆளு. அவர் தயவில் பல வங்கிகளில் மோசடியாக பணம் பெற்று வெளி நாட்டில் முதலீடு செய்து இப்போ வேஷம் போடுகிறார்.
Rate this:
Cancel
19-ஜன-202215:10:46 IST Report Abuse
ஆரூர் ரங் மால்யா வுக்கு சொத்து ஜாமீன் இல்லாமல் கடன் கொடுக்க சிபாரிசு செய்ததது மன்மோகன்😇 எஜமானியம்மா . விழுந்து விழுந்து கடன் கொடுத்தது😝 கிங் பின். கமிஷனுக்கு அடைக்கலம் கொடுத்து உதவுவது பெரியார் ஆள சொல்லி கெஞ்சிய பிரிட்டிஷ்😡 அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X