மனித உரிமை மீறல் ராஜபக்சே மறுப்பு

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (3)
Advertisement
கொழும்பு :''இலங்கையில் மனித உரிமை மீறல்களை என் தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது,'' என, அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.இலங்கை பார்லிமென்ட் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது:இலங்கையில் இன வேறுபாடு, மோதலுக்கு இனி இடமில்லை. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு போரால் 30 ஆண்டுகளாக இலங்கை
 மனித உரிமை மீறல்  ராஜபக்சே மறுப்பு

கொழும்பு :''இலங்கையில் மனித உரிமை மீறல்களை என் தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது,'' என, அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.

இலங்கை பார்லிமென்ட் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது:
இலங்கையில் இன வேறுபாடு, மோதலுக்கு இனி இடமில்லை. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news




உள்நாட்டு போரால் 30 ஆண்டுகளாக இலங்கை பாதிக்கப்பட்டது. இதில் பலர் மாயமாகி விட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் லாபங்களுக்காக மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் எந்த கட்சியும் ஈடுபடக் கூடாது.
மனித உரிமைகளை இலங்கை மீறியதாக சர்வதேச அளவில் தவறான கருத்து நிலவுகிறது; இதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் யோசனைகளை செயல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளது. மனித உரிமை மீறல்களை என் தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜன-202211:04:49 IST Report Abuse
duruvasar நகராட்சி தேர்தல் வருவதால் எங்கக சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் கொஞ்சம் ஓவரா வே கர்ஜிக்கும். கனியின் அண்ணன் சாட்டையை சுளுக்கினா அப்பறம் பொங்கல், புளியோதரை சாப்பிட காட்டுக்குள் ஓடி விடும்.
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
19-ஜன-202210:31:46 IST Report Abuse
mei சாத்தான் வேதம் ஓதுகிறது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202205:10:20 IST Report Abuse
Kasimani Baskaran இராஜிவ் காந்தியைக்கொன்ற கூட்டத்துக்கும் மனித உரிமைக்கும் என்ன சம்பந்தம்? அதே சமயம் ஒரு மணிநேரம் மட்டும் விரதமிருந்து, தம் கூட்டாளிக்கட்சியின் தலைமையில் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து இலங்கை தமிழ் உடன்பிறப்புக்களை காத்ததெல்லாம் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டிய நிகழ்வுகள்.😥
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X