லக்னோ :தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கிஉள்ளன.
![]()
|
இந்நிலையில் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளன. இதற்காக மக்களை கவரும் வகையிலும், எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையிலும் கட்சிகள் புதிய புதிய கோஷங்களை உருவாக்கியுள்ளன. சில கட்சிகள் 'வீடியோ'க்கள் வெளியிட்டு வருகின்றன.
வேட்பாளர் தேர்வு ஏன்?
கடந்தாண்டு பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலின்போது, தேர்தல் கமிஷன் புதிய உத்தரவை பிறப்பித்திருந்தது.அதன்படி குற்ற வழக்குகள் இருந்தபோதும், ஒருவர் வேட்பாளராக ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து அரசியல் கட்சிகள் ஊடகங்களில் விளக்கம் அளித்து விளம்பரம் செய்ய
வேண்டும்.உத்தர பிரதேச சட்டசபைக்கு நடக்கும் தேர்தலுக்கு, தான் அறிவித்த முதல்கட்ட 107 வேட்பாளர்களில், 25 பேரின் மீது குற்ற வழக்குகள்
உள்ளதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.'அரசியல் பழிவாங்கும் வகையில் இவர்கள் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன' என, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் மான்
பஞ்சாப் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் சிங் மான், 48, அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது லோக்சபா எம்.பி.,யாக பதவி வகிக்கிறார்.
சண்டிகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மக்களிடையே கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 21.59 லட்சம் பேர் தங்கள் விருப்பத்தை பதிவு செய்து
உள்ளனர். அதில் பலர் என் பெயரை கூறியிருந்தனர். நான் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இல்லை. அதனால் மற்ற ஓட்டுகளில் 93.3 சதவீதம் பேர் பகவந்த் மானின் பெயரை பரிந்துரைத்திருந்தனர். அவருக்கு அடுத்தபடியாக காங்.,கின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக
3.6 சதவீதம் பேர் ஓட்டளித்திருந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாபின் மொத்த மக்கள் தொகை 3.49 கோடி. அதில் 2.13 கோடி பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE