இது உங்கள் இடம்: பிரதமர் என்பவர் தேசத்தின் சொத்து!

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (63)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர்கள் இருவரின் படுகொலைகள் இன்று வரை மிகப்பெரிய வடுவாக, நம் அடி மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது. சீக்கியரின் பொற்கோவிலுக்குள், பிரிவினை வாதிகள் முகாமிட்டிருந்தனர். நம் நாட்டின் முதல்
Modi, PM Modi, Narendra Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்


வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர்கள் இருவரின் படுகொலைகள் இன்று வரை மிகப்பெரிய வடுவாக, நம் அடி மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது. சீக்கியரின் பொற்கோவிலுக்குள், பிரிவினை வாதிகள் முகாமிட்டிருந்தனர். நம் நாட்டின் முதல் பெண் பிரதமரும், 'இரும்பு பெண்மணி'யாக கருதப்பட்டவருமான இந்திரா, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

பொற்கோவில் மீது தாக்குதல் நடத்தினார் என்பதற்காக, தன் பாதுகாப்பு படை வீரர்களாக இருந்த சீக்கியர்களால், இந்திரா படுகொலை செய்யப்பட்டார். அதே போல, இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பிய பிரதமர் ராஜிவ் மீது, விடுதலை புலிகள் அமைப்பு கோபம் கொண்டது. நம் நாட்டிற்குள் புகுந்த விடுதலை புலிகள் அமைப்பினர், தற்கொலை படை தாக்குதல் நடத்தி, முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்தனர்.

இந்த இரண்டு படுகொலைகளும், நம் நாட்டின் பாதுகாப்பை கேள்விகுறி ஆக்கியது. பின், அவ்வப்போது எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல், நம் நாட்டில் சில தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான் காரணம் என்பது, உலகமே அறிந்தது.

கடந்த, 2014ல் பிரதமர் பதவியில் மோடி அமர்ந்தார். அதன் பின் எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டையும் துணிச்சலாக, இந்திய படை எதிர்கொண்டது. லடாக்கில், சீனாவுக்கு பதிலடி கொடுத்தார்; 'சர்ஜிகல் ஸ்டிரைக்' தாக்குதல் வாயிலாக பாகிஸ்தானுக்கும் பாடம் புகட்டினார், நம் பிரதமர் மோடி. இவை வாயிலாக, நம் ராணுவ வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தினார். இதனால் இந்த இரண்டு எதிரி நாடுகளும், இங்குள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சிகளை துாண்டி விடுகின்றன.


latest tamil news


இன்று உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த பிரதமர்களில் ஒருவராக, மோடி திகழ்கிறார். அப்படிப்பட்ட பிரதமருக்கு, உள்நாட்டிலேயே பாதுகாப்பு கொடுக்க தவறிய காங்., தலைமையிலான பஞ்சாப் அரசு நிச்சயம் குற்றவாளி தான் அல்லவா? பிரதமர் மோடியின் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரின் பாதுகாப்பு விஷயத்தில், காங்., அரசு அலட்சியம் காட்டியுள்ளது.

ஏற்கனவே முன்னாள் பிரதமர்கள் இருவரை, பறிகொடுத்து விட்டோம். மீண்டும் அப்படி ஒரு துன்பியல் நிகழ்வு, எப்போதும் நம் நாட்டில் நிகழக் கூடாது. பிரதமரின் பாதுகாப்பு என்பது, தனிநபர் சார்ந்தது அல்ல; அது தேசத்தின் நலன் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
20-ஜன-202203:09:42 IST Report Abuse
Ramesh Sargam பிரதமர் என்பவர் தேசத்தின் சொத்து அதுவும் இப்போது நமக்கு கிடைத்துள்ள பிரதமர் ஸ்ரீ மோடிஜி அவர்கள், தேடினாலும் கிடைக்காத பெரும் சொத்து. அவரை பாதுகாக்க வேண்டியது வொவொரு குடிமகனின் பொறுப்பு.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
19-ஜன-202222:16:53 IST Report Abuse
K.n. Dhasarathan இல்லை இல்லை , இந்தியா தான் அவர் சொத்து, அதனால் தான் ஒவ்வொன்றாக விற்கிறார், சரிதானே ?
Rate this:
Cancel
Gnana Subramani - Chennai,இந்தியா
19-ஜன-202221:27:26 IST Report Abuse
Gnana Subramani மக்களுக்காக தான் பிரதமர். அவருக்காக மக்கள் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X