போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்; பிப்., 27க்கு மாற்றம்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | |
Advertisement
சென்னை : கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், 23ம் தேதி நடைபெற இருந்த, போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், பிப்., 27க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிக்க, 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு தவணைகளாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தொடர் முயற்சிகளால் போலியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், 23ம் தேதி நடைபெற இருந்த, போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், பிப்., 27க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news




இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிக்க, 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு தவணைகளாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தொடர் முயற்சிகளால் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா உருவெடுத்தது. இதையடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.


latest tamil news




இந்தாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் 23ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. தமிழகத்தில், 5 வயதுக்கு உட்பட்ட 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை நாடு முழுதும் தீவிரமாகி வருகிறது.

பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, ஜன., 23ல் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்., 27க்கு தள்ளி வைக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகமும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X