தேசிய கொடியை அவமதிக்காதீர்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (7)
Advertisement
புதுடில்லி : 'அரசுத் துறைகள் நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் தேசிய கொடியை கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு உள்ளதை காண முடிகிறது. 'நம் தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில்
National Flag, State Govt, Central Govt

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'அரசுத் துறைகள் நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் தேசிய கொடியை கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு உள்ளதை காண முடிகிறது. 'நம் தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் காகிதத்தால் செய்யப்பட்ட தேசிய கொடியை மட்டுமே பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் தேசிய கொடிகளை தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்று கண்ணியமாக அப்புறப்படுத்த வேண்டும். ஆங்காங்கே தேசிய கொடிகளை வீசி எறிந்து அவமதிப்பு செய்யக்கூடாது.


latest tamil news



இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் அரசுத் துறைகள், நிறுவனங்கள், பொது மக்கள் தேசிய கொடியை கையாளத் தெரியாமல் அவமதிக்கும் காட்சிகளை அவ்வப்போது காண முடிகிறது. கொடியை மதிப்புடன் கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு மக்களிடையே உள்ளது. எனவே மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகள் ஊடக விளம்பரங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THIRUPPUGAZH GANESH - 606001,இந்தியா
19-ஜன-202212:29:58 IST Report Abuse
THIRUPPUGAZH GANESH ஒன்று. தேசிய கொடியை பயன்படுத்தும் முறைகள் குறித்த விதிகளை கொண்ட அறிவிப்பு பலகைகளை தேவையான இடங்களில் காட்சிப்படுத்துதல். இரண்டு. பயன் படுத்திய தேசிய கோடிதனை , முறையாக மறுசுழற்சி செய்ய/பயன் படுத்த , முறையான சேகரிப்பு பெட்டிகளை தேவையான இடங்களில் நிறுவுதல். ஆகிய கட்டாயம் பின்பற்ற வேண்டிய பொறுப்புகளை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் , நம் தேசத்தின் கௌரம்மிக்க அடையாளங்களில் ஒன்றாகிய கொடியின் மாண்பை காப்போம். திருப்புகழ் கணேஷ்.ஸ்ரீ 9159814264
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-ஜன-202211:07:40 IST Report Abuse
pattikkaattaan .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜன-202209:40:41 IST Report Abuse
duruvasar அவமரியாதையாக பேசவும் எழுதவும் படிக்கவும் இங்கு ஊடகங்கள் துணையுடன் பயிற்சிகள் கொடுக்கப்படட்டு கொண்டிருப்பதை அறியாதவர்கள் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X