கட்டுப்பாடின்றி காவல்துறை: கமல் கட்சி கண்டனம்

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்த வேண்டிய காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறதோ' என்ற அச்சம் எழுவதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.கமலின் மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை: சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரபாகரன் திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை
Kamal, Kamal Haasan, MNM

சென்னை: 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்த வேண்டிய காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறதோ' என்ற அச்சம் எழுவதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

கமலின் மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை: சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரபாகரன் திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லையென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார். ஜல்லிக்கட்டு ஸ்டெர்லைட் போராட்டங்களை ஒடுக்கிய போதும்; ஊரடங்கை நடைமுறைப்படுத்துகிறேன் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தபோதும்; சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் போதும் தமிழக காவல்துறை மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

புதிய அரசு வந்த பிறகாவது இத்தகைய அத்துமீறல்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகத்தில் மனித உரிமைகளும் சட்ட நடைமுறைகளும் மதிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறதா என்ற அச்சம் எழுகிறது. இதுபோன்ற அத்துமீறல்கள் இனியும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு உண்டு.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
19-ஜன-202216:52:32 IST Report Abuse
Vijay D Ratnam என்னய்யாது அல்லக்கையும் குரைக்குது. பொறைய போடுங்கப்பா
Rate this:
sasikumaran - chennai,இந்தியா
19-ஜன-202219:20:13 IST Report Abuse
sasikumaran........
Rate this:
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
19-ஜன-202216:14:51 IST Report Abuse
Nancy சி சி டீ வி - கேமரா வேலை சேலைய இல்ல ஆப் பண்ணி வச்சிடாங்களா
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
19-ஜன-202207:59:05 IST Report Abuse
Akash B team speaking
Rate this:
sasikumaran - chennai,இந்தியா
19-ஜன-202216:38:36 IST Report Abuse
sasikumaranநீ சி teamaa...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X