பொய்யை பரப்பும் தி.மு.க., அரசு; அண்ணாமலை ஆவேசம்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (41)
Advertisement
சென்னை : 'தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள், அரசியலை வியாபாரமாக வைத்து பிழைப்பவை. பொய்யை மூலதனமாக வைத்து பொய்யை பரப்பு கின்றன' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:நிபுணர் குழு முடிவு தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள். மத்திய அரசு, குடியரசு தின

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள், அரசியலை வியாபாரமாக வைத்து பிழைப்பவை. பொய்யை மூலதனமாக வைத்து பொய்யை பரப்பு கின்றன' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:


நிபுணர் குழு முடிவு

latest tamil news
தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள். மத்திய அரசு, குடியரசு தின அணிவகுப்பிற்கு தமிழகத்தில் இருந்து சென்ற அலங்கார ஊர்தியை நிராகரித்து இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது, பாதுகாப்பு துறையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் முடிவு எடுக்கக் கூடியது.


latest tamil news
அனைத்து மாநிலங்களையும், குடியரசு தின ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற செய்ய முடியாது. இடநெருக்கடி, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சில மாநிலங்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படும்.

மோடி அரசு வந்த பின், தமிழக அலங்கார ஊர்திகள், 2021, 2020, 2019 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு அணிவகுப்பில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கடந்த, 2021ல் தமிழக ஊர்தியில் மாமல்லபுர சிற்ப கலை, 2020ல் அய்யனார் சிலை, 2019ல் காந்தியின் 150வது பிறந்த நாளை கோலாகலமாக காட்டினோம்.

மேலும், 2017, 2016ம் ஆண்டிலும் வாய்ப்பு கிடைத்தது.பிரதமர் மோடி அரசு வந்த பின் தான், தமிழகத்திற்கு ஐந்து முறை வாய்ப்பு கிடைத்தது. வேறு எந்த மாநிலத்திற்கும் இவ்வளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு, தமிழகம் வழங்கிய, 'கான்செப்ட்டை' நிபுணர் குழு பரிசீலித்தது.

அவர்கள் எடுத்த முடிவு அடிப்படையில், இந்த முறை தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது, வருத்தப்பட கூடிய விஷயம். வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோருக்கு, மத்திய அரசு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறுவது சுத்த பொய். மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் ஆகிய மூன்று மாநில அரசுகளும், அரசியலை வியாபாரமாக வைத்து கொண்டு பிழைப்பவை.

இந்த அரசுகள், பொய்யை மூலதனமாக வைத்து பொய்யை பரப்புகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.24ல் ஆலோசனைஉள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. தி.மு.க., மாவட்ட செயலர்கள், தங்கள் மாவட்டங்களில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் இட பங்கீடு குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

தமிழக பா.ஜ.,வின் உயர்நிலை குழு கூட்டம், சென்னையில் 24ம் தேதி நடக்கிறது. அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர், பொது செயலர்கள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 12 பேர் பங்கேற்பர் என தெரிகிறது.

கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., உடனான இட பங்கீடு பேச்சை துவக்குவது குறித்தும், எந்தெந்த மாநகராட்சிகளில் அதிக வார்டுகளில் போட்டியிடுவது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜன-202220:52:10 IST Report Abuse
அப்புசாமி அலங்கார ஊர்தியை அனுப்பிச்சு என்னத்த கண்டோம்? ஏதோ மூணு தடவை பாப்பாங்களாம். ரொம்ப நல்லா இருக்குறதை செலக்ட் பண்ணுவாங்களாம். எல்லா ஊர்திகளையும் அனுமதிச்சாதான் நாட்டு ஒற்றுமை ஓங்கும். இது மாதிரி பறஞ்சு விட்டால் ஒத்துமைக்கு சங்குதான்.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
19-ஜன-202217:02:10 IST Report Abuse
Nellai tamilan பொய்யில் பிறந்த விடியல் அரசு.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-ஜன-202215:16:49 IST Report Abuse
S.Baliah Seer தடுப்பூசி மக்களின் நன்மைக்கா போடச்சொல்கிறீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X