வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் பெண் டாக்டருக்கு ஐந்து 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக பதிவான தகவல் குறித்து விசாரணை துவங்கியுள்ளது.
பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பெண் டாக்டர் விபா குமாரி சிங், ஐந்து 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளதாக 'கோவின்' இணையதளத்தில் பதிவாகியுள்ளது. கடந்தாண்டு ஜன., 28ல் முதல் டோஸ் மற்றும் மார்ச்சில் இரண்டாவது டோஸ் போட்டுள்ளார். கடந்த 13ல் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார். ஆதார் எண் அடிப்படையில் அவர் தடுப்பூசி போட்டு உள்ளார்.
இந்நிலையில் அவரது 'பான் கார்டு' எண்ணை ஆதாரமாக காட்டி கடந்தாண்டு பிப்., 6 மற்றும் ஜூன் 17ல் தடுப்பூசி போட்டுள்ளதாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த டாக்டர் புகார் அளித்துள்ளார். தன் பான் கார்டு எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை துவங்கி உள்ளது.
பீஹாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர், 11 தடவைக்கு மேல் தடுப்பூசி போட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார். தடுப்பூசி போட்டதால் முதுகுவலி சரியானதாகவும், பின் வலி ஏற்பட்டபோதெல்லாம் தடுப்பூசி போட்டதாகவும் அவர் அப்பாவியாக கூறியிருந்தார். இது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE