முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணி: போலீசாருக்கு டி.ஜி.பி., பாராட்டு

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை : 'முழு ஊரடங்கு நாட்களில் விதிமீறல் தொடர்பாக, 34 ஆயிரத்து 913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78.34 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இம்மாதம், 9, 16ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமலானது. இந்த நாட்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் சிறப்பாக பணிபுரிந்தீர்கள்.
Sylendra Babu, DGP, lockdown, Director General of Police

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'முழு ஊரடங்கு நாட்களில் விதிமீறல் தொடர்பாக, 34 ஆயிரத்து 913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78.34 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.



போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இம்மாதம், 9, 16ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமலானது. இந்த நாட்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் சிறப்பாக பணிபுரிந்தீர்கள். பொது மக்கள் சிலர், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட போதிலும், சிலர் தாக்கிய போதிலும், துறைக்குரிய பொறுப்புடனும், பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும், சாமர்த்தியத்துடன் செயல்பட்டீர்கள்.


latest tamil news


இப்பணியில் தங்களை ஈடுபடுத்திய அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு என் பாராட்டுக்கள். எஸ்.பி., மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ரோந்து சென்று, பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியது, அவர்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையையும், நன்மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு நாட்களிலும், முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக, 34 ஆயிரத்து 913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78.34 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது, வெளியூர் சென்று திரும்புவோர் ரயில், பஸ் நிலையங்களுக்கு வந்த பின், வீட்டிற்கு செல்ல, ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும், அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. பொது மக்கள், ஆட்டோ மற்றும் டாக்சியில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDARASIVAM S - baghram,இந்தியா
19-ஜன-202213:09:16 IST Report Abuse
SUNDARASIVAM S சொல்லுறவங்க சொல்லுரவீதமா சொன்னா ,, அதுக்கு மதிப்பு கண்டிப்பாக கொடுப்பார்கள்.
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை போலீஸாரை தாக்கிய பொதுமக்கள் யார்? எந்த ஊரில் நடந்தது? அவர்கள் மேல் வழக்கு பதியவில்லையா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜன-202209:13:39 IST Report Abuse
duruvasar தமிழகத்தை அமைதி பூங்காவின் தலைமையிடமாக மாற்றிவிட்டால் காவலர்கள் ஊரடங்கு மாதிரியான மிக கடினமான பணியை இராணுவத்தை மிஞ்சும் வகையில் செயல்பட வைத்துவிட்டீர்கள். தனியொரு மனிதனாய் சைக்கிளில் பயணம் மேற்கோண்டு முதல்வரின் வழிகாட்டுதல்படி இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த அனைத்து பெருமையும் தங்களையே சேரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X