நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; இன்று அனைத்து கட்சி கூட்டம்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, விரைவில் ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு கட்டங்களாக, இத்தேர்தல்


சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, விரைவில் ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு கட்டங்களாக, இத்தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல், பிப்ரவரி 14க்குள் நடக்க இருக்கிறது.

தேர்தல் தொடர்பான பணிகளில், மாநில தேர்தல் கமிஷன் கவனம் செலுத்தி வருகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை பிரித்து, நேற்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல்தேதியை அறிவிக்க, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.


latest tamil news



அதற்கு முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் கூட்ட அரங்கில், பகல் 11:30 மணிக்கு இந்த கூட்டம் துவங்கவுள்ளது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., - தே.மு.தி.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ஒவ்வொரு கட்சியில் இருந்தும், இரண்டு பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு உள்ளனர். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.அரசியல் கட்சிகளின் ஆக்கப்பூர்வமாக கருத்துக்களை கேட்டு, அதை தேர்தலில் செயல்படுத்தவும், மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் தேர்தல் தேதிகளை அறிவிக்க, கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜன-202208:58:58 IST Report Abuse
duruvasar எல்லாம் ஃபொரிஜர் படி செய்யுங்கள். ஊராட்சி தேர்தல் முடிவுகள் மாதிரி உறுதி சேய்யுங்கள். நகராட்சி மக்களுக்கு விடியல் தருவது உங்கள் பொறுப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X