பாங்காங் ஏரியில் பாலம் கட்டுகிறது சீனா: எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க திட்டம்

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி : லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருவது, செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கிழக்கு லடாக் எல்லையில் படைகளை குவித்து பதற்றத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் எல்லையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ல் சீன ராணுவம்
India, China, bridge, Pangong

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருவது, செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கிழக்கு லடாக் எல்லையில் படைகளை குவித்து பதற்றத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் எல்லையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ல் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு நம் ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. இந்த மோதலுக்கு பின், பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர்.


எட்டு பாகங்கள்


லடாக்கின் பாங்காங் ஏரி 134 கி.மீ. நீளமும், 5 கி.மீ. அகலமும், 270 சதுர மைல் பரப்பளவும் உடையது. இதன் 40 சதவீத பரப்பளவு இந்தியாவிடமும், 50 சதவீத பரப்பளவு சீனாவிடமும் உள்ளது. மீதமுள்ள 10 சதவீத பகுதி சர்ச்சைக்குரியதாக நீடிக்கிறது. இந்த ஏரி எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் நான்கு வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை.

சமீப காலமாக பாங்காங் ஏரிப் பகுதியில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளது. இந்நிலையில் சீன எல்லைக்கு உட்பட்ட பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் வகையில் அந்நாட்டு ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருகிறது. ராட்சத கிரேன்களை பயன்படுத்தி இந்த பாலத்தை சீன வீரர்கள் கட்டி வருகின்றனர். இது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




200 கி.மீ., தொலைவு


இது குறித்து நம் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியான குர்னாக்கில் இருந்து தெற்கு பகுதியான ரூடாக்குக்கு சாலை வழியாக செல்ல 200 கி.மீ., தொலைவை கடந்தாக வேண்டும். தற்போது இரு கரைகளையும் இணைத்து புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வருகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் பயண தொலைவு 40 - 50 கி.மீ.,யாக குறையும்.

இதனால் சீன ராணுவ தரப்பில் மிக குறுகிய நேரத்தில் அதிக வீரர்களை பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்க முடியும்.கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது சீன ராணுவம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அப்போது முதலே பாங்காங் ஏரியில் பாலத்தை கட்டும் பணியை துவக்கி விட்டது. தற்போது பாலம் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தவிர எல்லை பகுதியில் சாலைப் பணிகளையும் சீன ராணுவம் மேம்படுத்தி வருகிறது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் கூறின.


நீண்ட கால விருப்பம்


பாங்காங் ஏரியில் தனக்குட்பட்ட பகுதியில் தான் சீனா பாலம் கட்டி வருகிறது. எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. பாங்காங் ஏரியின் சர்ச்சைக்குரிய 10 சதவீத பரப்பை கையகப்படுத்த வேண்டும் என்பது சீனாவின் நீண்ட கால விருப்பம். இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சீனாவால் இதை நிறைவேற்ற முடியவில்லை.

இப்போது பாலம் கட்டி முடித்து விட்டால், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீனாவால் ராணுவத்தை விரைவில் குவித்து, எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க முடியும். இதன் வாயிலாக இந்தியாவை அச்சுறுத்த முடியும் என சீனா கருதுகிறது.அதேநேரத்தில் சீனாவின் சதித் திட்டங்களுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது.


தொலை தொடர்பு வசதி


கல்வான் பள்ளத்தாக்கு, டோக்லாம், லே, தவாங் உட்பட நம் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் உள்ள கிராமங்களில் பலமான தொலை தொடர்பு வசதிகளை ஏற்படுத்த பி.எஸ்என்.எல்., நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக சாட்டிலைட் போன் வசதியை ஏற்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளிலும், எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
19-ஜன-202216:58:47 IST Report Abuse
radha ....
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
19-ஜன-202216:00:02 IST Report Abuse
Gandhi சீனா மற்றும் பாகிஸ்தான் மீது மிக பெரும் தாக்குதல் நடத்தவேண்டிய கட்டாயம் இந்தியாவை நெருங்குகிறது.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
19-ஜன-202215:12:39 IST Report Abuse
Samathuvan அதெல்லாம் கிடக்கு விடுங்க, நம்ம முதலில் எப்படி இந்த ஊ பீ ஐ நம்ம கையை விட்டுப்போகாம காப்பாத்துறதுன்னு பாப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X