வீட்டில் இருந்தே அஞ்சல் சேவை; 'போஸ்ட் இன்போ'வை பயன்படுத்த அறிவுரை

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (7)
Advertisement
கோவை: வீட்டில் இருந்தபடியே அஞ்சல் சேவைகளை பெற, வாடிக்கையாளர்கள் 'போஸ்ட் இன்போ' செயலியை பயன்படுத்தலாம் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை பெறும் வகையில், 2020ம் ஆண்டு, ஊரடங்கு சமயத்தில், 'போஸ்ட் இன்போ' என்ற மொபைல் செயலியை, அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், அஞ்சல் நிலையத்திற்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கோவை: வீட்டில் இருந்தபடியே அஞ்சல் சேவைகளை பெற, வாடிக்கையாளர்கள் 'போஸ்ட் இன்போ' செயலியை பயன்படுத்தலாம் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை பெறும் வகையில், 2020ம் ஆண்டு, ஊரடங்கு சமயத்தில், 'போஸ்ட் இன்போ' என்ற மொபைல் செயலியை, அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.

மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், அஞ்சல் நிலையத்திற்கு வராமலே, பல்வேறு சேவைகளை பெற, 'போஸ்ட் இன்போ' செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news




போஸ்ட் இன்போ மொபைல் செயலியை, கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், பார்சல் என புக் செய்த அனைத்து வகை அஞ்சல்களையும், எலக்ட்ரானிக் மணி ஆர்டர் குறித்தும், கண்காணிக்க முடியும்.

அஞ்சல்நிலையங்களை கண்டறிய, தங்களது புகார்கள் குறித்து கண்காணிக்க மற்றும் போஸ்டேஜ் கால்குலேட்டர், இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் வட்டி கால்குலேட்டர் உள்ளிட்ட சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
19-ஜன-202216:47:15 IST Report Abuse
R S BALA போஸ்ட் ஆபீஸ் சேவைகள் அதில் குத்தப்படும் ஸ்டாம்ப் போல பலவருடம் பின்தங்கியுள்ளது..
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜன-202213:58:53 IST Report Abuse
S. Narayanan அடித்தட்டு மக்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடு தெரியாதவர்கள் மற்றும் முதியோர் நலம் கருதி ஒவ்வொரு தபால் அலுவலகமும் ஒரு மொபைல் வாகன சேவைகள் அந்த மக்கள் வாசலுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜன-202210:31:39 IST Report Abuse
A.George Alphonse இந்த post info ஆப் பினால் ஒரு பயனும் இல்லை.இதில் கூறியபடி.post office சேவை செய்வதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X