உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை; ஜன.,22ல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று (ஜன.,19) ஆலோசனை நடத்தியது. ஜன.,22ல் தேர்தல் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் 2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. முதலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுக்காக தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, சில மாதங்கள் தேர்தல் தள்ளிப் போனது.
Local Body Election, Tamilnadu, Announcement, உள்ளாட்சி தேர்தல், ஆலோசனை, ஜனவரி 22, அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று (ஜன.,19) ஆலோசனை நடத்தியது. ஜன.,22ல் தேர்தல் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. முதலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுக்காக தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, சில மாதங்கள் தேர்தல் தள்ளிப் போனது. அதன்பின், வெவ்வேறு காரணங்களை காட்டி, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் தடைபட்டது.
கடந்த 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதிலும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, கடந்த அக்டோபரில் தேர்தல் நடந்தது. ஆனால், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு ஜன.,24ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


latest tamil news



இதற்கிடையே நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் இன்று (ஜன.,19) அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கேட்டறிந்தார்.


latest tamil news



உச்சநீதிமன்றத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு 24ம் தேதி வருவதால் ஜன.,22ல் தேர்தல் அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கொரேனாா காரணமாக தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜன-202210:26:49 IST Report Abuse
Sampath Kumar ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X