வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
உத்தர பிரதேசம் , பஞ்சாப், உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை கூட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங்கின் இளைய மகன், பிரதீக் யாதவ். இவரது மனைவி அர்பணா யாதவ். இவர் இன்று (ஜன. 19) டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பா.ஜ., மாநில தலைவர் சுவந்திர தேவ் சிங் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

இதன் பின்னர் அபர்ணா யாதவ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அக்கட்சியின் சாதனைகளும், செயல்பாடுகளும் எனக்கு பிடித்தது. பிரதமர் மோடியின் பணிகள் என்னை ஈர்த்தது. தேசமே முதன்மை என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE