உ.பி., தேர்தலில் அகிலேஷ்காக களமிறங்கும் மம்தா

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை எனவும், அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கோவிட் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டிஜிட்டல் வடிவிலான பிரசாரம்
Mamata Banerjee, Campaign, Akhilesh Yadav, SP, UP, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசம், உபி, தேர்தல், பிரசாரம்

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை எனவும், அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கோவிட் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டிஜிட்டல் வடிவிலான பிரசாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி உ.பி., தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


இதற்கு முன்பாக, மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சமாஜ்வாதி துணைத் தலைவர் கிரண் நந்தா கூறியதாவது: காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள மம்தா, வாரணாசி வரவுள்ளார். மம்தா பானர்ஜி ஒரு வலிமையான தலைவர். மேற்குவங்க தேர்தலில் அவர் பா.ஜ.,வுக்கு எதிராக போராடி, தோற்கடித்த விதம் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு பாடம். அவரது போராட்டத்தை இந்த தேசமே பார்த்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202204:02:49 IST Report Abuse
J.V. Iyer மம்தா கட்சிக்கு ஒரு அறுவது சீட்டு கொடுத்தால் என்ன?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜன-202219:46:07 IST Report Abuse
sankaseshan BJP உறுப்பினர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றவர்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
19-ஜன-202219:07:14 IST Report Abuse
sankar வேஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X