ரேஷன் அரிசி கடத்தல் ஏழைகளுக்கு எதிரானது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (7)
Advertisement
மதுரை: 'ரேஷன் அரிசியை கடத்துவது, ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றம்' என அதிருப்தியை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அது குறித்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், 2021 பிப்.,6 ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சிலர், அனுமதியின்றி 350 பிளாஸ்டிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: 'ரேஷன் அரிசியை கடத்துவது, ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றம்' என அதிருப்தியை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அது குறித்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.



latest tamil news


துாத்துக்குடியில் 350 பிளாஸ்டிக் பைகளில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, அனஸ் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். கைது செய்யப்படலாம் என்ற சூழலில் முன் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். வழக்கை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கொள்முதல் செய்து மனுதாரர் விற்பனை செய்து வந்துள்ளார். ரேஷன் அரிசியை ஏழைகள் பயன்படுத்துகின்றனர். அந்த அரிசியை கடத்துவது, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு எதிரான குற்றம் என கூறிய நீதிபதி, அனசின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.


துாத்துக்குடி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், 2021 பிப்.,6 ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சிலர், அனுமதியின்றி 350 பிளாஸ்டிக் பைகளில், ரேஷன் அரிசியைக் கொண்டு சென்றதைக் கண்டுபிடித்தனர்.அரிசி மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:
ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக மனுதாரர் பெயர் சேர்க்கப் பட்டுஉள்ளது, முதலாவது எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் தெரிகிறது.


latest tamil news



மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கொள்முதல் செய்து, விற்பனை செய்த முக்கிய நபர் மனுதாரர் என்பதும் தெரியவந்துள்ளது. ரேஷன் அரிசியை ஏழைகள் பயன்படுத்துகின்றனர். அந்த அரிசியை கடத்துவது, ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றமாக அமையும். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


மூவருக்கு 'குண்டாஸ்'



கடலுார் மாவட்டம் சிறுபாக்கம் போலீசார், கடந்த 26ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாங்குளத்தில் ஒரு லாரியை சோதனையிட்டதில், 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மங்களூரு ரஞ்சித், 25; வேல்முருகன், 30; சங்கரன்பாளையம் ராமச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித், வேல்முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
19-ஜன-202219:00:51 IST Report Abuse
Balaji அஃகா ஆகக்கா கண்டுபுடிச்சிட்டோம்ல.. இனி ஒரு புரட்சி நடக்கும்... ஹய்யோ ஹய்யோ...
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
19-ஜன-202217:12:19 IST Report Abuse
நக்கீரன் சரி அதுக்கு இப்போ என்ன செய்யப்போறீங்க. அதிகாரம் இருப்பவர்கள் ஒன்றும் பிரயோஜனமில்லாமல் கருத்துக்களை கூறி கடந்து செல்வதுதான் பிரச்சனையே.
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
19-ஜன-202215:54:42 IST Report Abuse
செல்வம் அடுத்தது தீம்கா ஆட்சி ஏழைகளை உருவாக்குவது அல்லது அவர்களை அப்படியே வைத்திருப்பது. அந்தக் கட்சியில் இருக்கும் ரவுடிகள் மட்டுமே கோடிகோடியாக சொத்து சேர்ப்பது என்று சொல்வார் போலிருக்கிறது. இது படிக்காத பாமரனுக்கும் தெரிந்த விஷயம் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X