சிவகங்கை: தமிழக சரித்திரத்தை குடியரசு தின விழாவில் வெளிக்கொண்டு வருவதில் பா.ஜ., அரசுக்கு என்ன இடைஞ்சல் என தெரியவில்லை. இதனை கண்டித்து எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் குடியரசு தினவிழாவை புறக்கணிக்க வேண்டும் என காரைக்குடியில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழக அலங்கார ஊர்தியை டில்லி குடியரசு தினவிழாவில் இடம் பெற செய்யாதது வருத்தமளிக்கிறது. தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தை காக்க எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வரும் குடியரசு தின விழாவை புறக்கணிப்பதா அல்லது குடியரசு தினவிழாவை தமிழகத்தில் பெரிய அளவில் கொண்டாடுவதா என்பதை தமிழக அரசு தான் சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களும் பா.ஜ.,வை எதிர்க்கும் மாநிலம். எனவே புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதம் உருவாகும் முன்பாக நாகரிகம் உருவானது என்பதை கீழடி தெரிவிக்கிறது. ஜான்சிராணிக்கு 75 ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் வேலுநாச்சியார். இதனால் பா.ஜ., எதிர்க்கிறது. இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE