வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அசக்கர்க் தொகுதி மக்களின் அனுமதியை பெற்ற பிறகு அங்கு போட்டியிடுவேன் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபைக்கு பிப்.,10 துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அசம்கர்க் தொகுதி எம்.பி.,யாக இருக்கும் அகிலேஷ், சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் ஒவ்வொரு தொகுதியாக கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பா.ஜ., சார்பில் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அகிலேஷூம் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அவர் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நிருபர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அசம்கர்க் தொகுதி மக்களிடம் கேட்டறிந்த பிறகே முடிவு செய்வேன். அவர்கள் அனுமதி அளித்த பின், போட்டியிடுவதாக இருந்தால், அசம்கர்க்கில் களமிறங்குவேன் என்றார்.
அபர்ணா யாதவ் பா.ஜ.,வில் இணைந்தது குறித்த கேள்விக்கு அகிலேஷ் அளித்த பதில்: முதலில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். சமாஜ்வாதியின் கொள்கைகள் விரிவடைவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை சமாதானப்படுத்த முலாயம் சிங் தீவிர முயற்சி மேற்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE