பஞ்சாப் முதல்வர் உறவினர் வீட்டில் ரூ.7.9 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (15)
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் உறவினர் பூபிந்தர் சிங் ஹானி வீட்டில் ரூ.3.9 கோடி பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். நேற்று(ஜன,18) ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.பஞ்சாபில் சட்ட விரோத மணல் குவாரிகள், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது 2018 ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறையினரும் பண மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
ED, recover, Bhupinder Singh, residence, recover,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் உறவினர் பூபிந்தர் சிங் ஹானி வீட்டில் ரூ.3.9 கோடி பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். நேற்று(ஜன,18) ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

பஞ்சாபில் சட்ட விரோத மணல் குவாரிகள், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது 2018 ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறையினரும் பண மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று சண்டிகர், மொஹாலி உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சட்டவிரோத மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். முதல்வர் சரண்ஜித் சிங் உறவினரான பூபிந்தர் சிங் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. நேற்று காலை 7:30 மணி முதல் நடந்த சோதனையில் லூதியானாவில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. பூபிந்தர் வீட்டில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.


latest tamil news




இரண்டாவது நாளாகவும் இன்றும் சோதனை நடந்தது. அதில் பூபிந்தர் சிங் வீட்டில் மேலும் ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு இடத்தில் ரூ.80 லட்சம் சிக்கியது.
அமலாக்கத்துறை சோதனையில் இதுவரை ரூ.10.7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பூபிந்தர் சிங் வீட்டில் மட்டும் ரூ.7.9 கோடி பறிமுதலானது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202206:01:31 IST Report Abuse
Kasimani Baskaran சீனா போல 100 ரூபாய்தான் அதிகபட்சமான காகிதப்பணம் என்று அறிவித்தால் இதையெல்லால் முழுமையாகக் கட்டுப்படுத்திவிடலாம்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஜன-202202:00:24 IST Report Abuse
DARMHAR இந்த காலத்தில் எந்த அரசியல்வாதியும் பொது மக்கள் வரிப்பணத்தை தனது தன் குடும்ப நலத்திற்காக சுருட்டாமல் இருப்பது அரிது .கல்லக்குடி கொண்டான் என்ற புனைபெயர் சூட்டிக்கொண்ட ஒருவர் தான் தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த போதே சொல்லிவிட்டார்."கொடுப்பதைக்கொடுத்து பெறவேண்டியவையை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று வாழையடி வாழையாக தற்போது நிகழ்வதும் அவரது கூற்றுப்படித்தான்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
19-ஜன-202221:13:30 IST Report Abuse
a natanasabapathy காங்கிரஸ் காரன் நாட்டை சுரண்டுவத விடமாட்டார்கள் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X