வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வரும் 27 ம் தேதி எம்.பி.பி.எஸ் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு துவங்குகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
![]()
|
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதுநிலைமருத்துவ படிப்புகளில் மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. மாநில இடங்கள் 1,163 இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 1,053 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது. வரும் 27 ம் தேதி எம்.பி.பி.எஸ் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு துவங்குகிறது. 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 28 மற்றும் 29 ம் தேதிகளில் நடைபெறும். மொத்தம் உள்ள 6,999 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
![]()
|
நாளை முதியோர் பூஸ்டர் தடுப்பூசி முகாம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 160 இடங்களில் முதியோருக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 60 வயது மேற்பட்டஇணை நோய் உள்ள முதியவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE