சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'கோடை விழா' நடத்த கோரிக்கை!

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (1)
Advertisement
'கோடை விழா' நடத்த கோரிக்கை!''பணியிட மாறுதல் கிடைச்சும், அங்கே போக முடியலையேன்னு புலம்புறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''என்ன விஷயமுன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மாநிலம் முழுசும், 'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்துல, போலீசாரிடம் குறை கேட்பு சிறப்பு முகாம் சமீபத்துல நடந்துச்சு... இதுல பெரும்பாலான

 டீ கடை பெஞ்ச்


'கோடை விழா' நடத்த கோரிக்கை!



''பணியிட மாறுதல் கிடைச்சும், அங்கே போக முடியலையேன்னு புலம்புறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''என்ன விஷயமுன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மாநிலம் முழுசும், 'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்துல, போலீசாரிடம் குறை கேட்பு சிறப்பு முகாம் சமீபத்துல நடந்துச்சு... இதுல பெரும்பாலான போலீசார்
பணியிட மாறுதல் கேட்டுருந்தாங்க பா...

''உரிய பரிசீலனைக்கு அப்புறம், டிச.,6ல், 1,127 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு போட்டாரு பா...

''பணியிட மாறுதல் கிடைச்சவங்களுக்கு, அவங்களோட உயர் அதிகாரிகள் விடுவிப்பு உத்தரவு பிறப்பித்தால் தான், புதிய இடத்துக்கு போய் வேலையில சேர முடியும்... ஆனா பெரும்பாலான
போலீசாருக்கு இன்னும் விடுவிப்பு உத்தரவு பிறப்பிக்கலையாம் பா...

''குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான் பணியிட மாறுதல் வாங்குனோம்... ஆனால், விடுவிப்பு உத்தரவு பிறப்பிக்காமல் தாமதம் பண்ணுறாங்களேன்னு சம்பந்தப்பட்ட போலீசார் புலம்புறாங்க பா...'' என முடித்தார்,
அன்வர்பாய்.

''நிருபர்கள் பேரை சொல்லியும், வசூல் பண்ணுறாவ வே...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''என்ன இப்படி கிளம்பிட்டாங்க... நீங்க விஷயத்தை சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை அம்பத்துார், மாதவரம் மதுவிலக்கு போலீசார், தங்கள் எல்லைக்குள் இருக்குற, 'டாஸ்மாக் பார்' உரிமையாளர்களிடம், நிருபர்களுக்கு கொடுக்கணுமுன்னு சொல்லி தனியாக ஒரு தொகையை, 'கறாராக' வசூலிக்கிறாவ வே...

''அதுக்காக சிறிய, பெரிய பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்களோட பட்டியலை தயாரிச்சு, அதை காட்டி வசூல் பண்ணுறாவ... இந்த மாதம், பொங்கல் பரிசு தரணுமுன்னு, கூடுதல் வசூலும் நடத்திருக்காவ வே...

''அதனால் தான், நள்ளிரவு முதல் அதிகாலை வரை மட்டுமின்றி, அரசு விடுமுறை நாட்களிலும், அம்பத்துார், மாதவரம் சுற்றுவட்டாரங்களில், தாராள மது விற்பனை நடக்குதாம் வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''பொங்கல் கலைவிழாவை, கோடையில நடத்தலாமுன்னு ஆலோசனை சொல்லி இருக்காங்க...'' என கடைசி தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''பாரம்பரிய கலையின் சிறப்புகளை வெளிப்படுத்தவும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பொங்கல் பண்டிகையையொட்டி, 14 முதல் 16ம் தேதி வரை, 'நம்ம ஊரு திருவிழா'ன்னு, கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டம் போட்டுருந்துங்க...

''இந்த விழாவுக்காக, கலை பண்பாட்டுத் துறை, 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இருந்துச்சுங்க... இந்த கலை விழாவை சென்னையில ஆறு இடங்களிலும், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தவும் திட்டமிட்டு இருந்தாங்க...

''இதுல, 1,500க்கும் மேற்பட்ட கலைஞர்களை ஈடுபடுத்தவும் முடிவு பண்ணியிருந்தாங்க...

''இந்நிலையில, கொரோனாவின் மூணாவது அலை காரணமாக, கலை நிகழ்ச்சிகள் நடத்தலைங்க... இதனால ஆயிரக்கணக்கான கிராமியக் கலைஞர்களுக்கான வாய்ப்பு பறிபோய் இருக்குங்க...

''இதுக்காக ஒதுக்குன நிதியை திருப்பி ஒப்படைக்காமல், வரும் சித்திரை மாசம், 'கோடை விழா' என்ற பெயருல நடத்தணுமுன்னு, கிராமியக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''நல்ல விஷயம் தானே ஓய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, நண்பர்களும் இடத்தை காலி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜன-202219:25:11 IST Report Abuse
D.Ambujavalli மாறுதல் பெற்ற காவலர்களை விடுவிக்க வேண்டியவர்கள் 'பசையுள்ள' ஏரியாவிலிருந்தால் எப்படி வருவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X