ஜன., 20, 1859
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில், 1859 ஜன., 20ம் பிறந்தவர், சவரிராயன். கொல்லம் குருமடத்தில் சேர்ந்து, கிறிஸ்துவ மத சாத்திரங்களை கற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.துாத்துக்குடியில் துவக்கப் பள்ளி ஆசிரியராக பணியை துவக்கினார். பின், 20 ஆண்டுகளுக்கு மேலாக கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.தமிழின் தொன்மை குறித்து பல ஆராய்ச்சிகள் செய்து, ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ்த் தொன்மை ஆராய்ச்சிக் கழகம் நிறுவினார். 'பாரதவம்ச விளக்கம்' உள்ளிட்ட பல நுால்கள் எழுதியுள்ளார்.
துாத்துக்குடியில், 'உழவர் கழகம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, உழவர்களின் நன்மைக்காக செயல்பட்டார். திருச்சி நகர சபையில் இரு முறை உறுப்பினராக இருந்தார். 1923 ஆக., 24ம் தேதி, தன் 64வது வயதில் காலமானார்.பண்டிதர் சவரிராயன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE