பெங்களூரு விமான விபத்து கடைசி நேரத்தில் தவிர்ப்பு| Dinamalar

பெங்களூரு விமான விபத்து கடைசி நேரத்தில் தவிர்ப்பு

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (12) | |
புதுடில்லி :பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து அடுத்தடுத்து புறப்பட்ட இரண்டு 'இண்டிகோ' பயணியர் விமானங்கள், ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட இருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து,
பெங்களூரு விமான விபத்து கடைசி நேரத்தில் தவிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து அடுத்தடுத்து புறப்பட்ட இரண்டு 'இண்டிகோ' பயணியர் விமானங்கள், ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட இருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து, பெங்களூரு - கோல்கட்டா, பெங்களூரு - புவனேஸ்வர் இடையே, 'இண்டிகோ' நிறுவனத்தின் இரண்டு
பயணியர் விமானங்கள் கடந்த 9ம் தேதி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து புறப்பட்டன.


latest tamil news




வானத்தில் பறக்கும் போது இந்த இரண்டு விமானங்களும் ஒன்றுக்கு ஒன்று கட்டாயம் பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச துாரத்தை கடைப்பிடிக்கவில்லை. இதனால் விமானங்கள் நெருக்கமாக பறந்தன.கட்டுப்பாட்டு அறையில் இருந்து சரியான நேரத்தில் தகவல் அளித்ததால், விமானங்கள் சட்டென விலகின. இதனால் பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் எந்த பதிவேட்டிலும் பதிவாகவில்லை. இந்திய விமான நிலைய ஆணையமும் புகார் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், ''இந்த விவகாரம் குறித்து டி.ஜி.சி.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. அலட்சியத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்,'' என, டி.ஜி.சி.ஏ., தலைவர் அருண் குமார் செய்தியாளர்களிடம்

தெரிவித்தார்.இந்த இரு விமானங்களிலும், 400 பேருக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X