தக்காளியை கைவிடாத விவசாயிகள்; சாகுபடி பணிகள் மீண்டும் தீவிரம்

Added : ஜன 19, 2022
Advertisement
பொள்ளாச்சி : தக்காளி பயிர் இந்தாண்டு மழைக்கு கடுமையாக பாதிப்படைந்து, விவசாயிகளை கைவிட்டாலும், விவசாயிகள் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு பகுதியில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு, வடக்கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் பெய்ததது.இதனால், காய்ப்பு பருவத்தில்
 தக்காளியை கைவிடாத விவசாயிகள்; சாகுபடி பணிகள் மீண்டும் தீவிரம்

பொள்ளாச்சி : தக்காளி பயிர் இந்தாண்டு மழைக்கு கடுமையாக பாதிப்படைந்து, விவசாயிகளை கைவிட்டாலும், விவசாயிகள் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு பகுதியில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு, வடக்கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் பெய்ததது.இதனால், காய்ப்பு பருவத்தில் இருந்த தக்காளி வயல்களில், மழைநீர் தேங்கி செடிகள் அழுகல் நோய் கண்டும், வைரஸ் தாக்கியும் கடுமையாக பாதிப்படைந்தன. தக்காளி காய்களும் அழுகின. இதனால், விவசாயிகள் முழுமையான நஷ்டத்தை சந்தித்தனர்.தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், சந்தையில் விலை அதிகரித்து, கிலோவுக்கு அதிகபட்சமாக, 120 - 150 ரூபாய்க்கு விற்பனையாகி, மக்களை மலைப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், மழை ஓய்ந்து பருவநிலை மாறி, பனி மற்றும் வெயில் நிலவுகிறது. விரைவில், கோடை காலம் துவங்கவுள்ளது.இதையடுத்து, பொள்ளாச்சி விவசாயிகள் மீண்டும் தக்காளி சாகுபடியை நம்பிக்கை இழக்காமல் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'கடந்தாண்டு சாகுபடியில் தக்காளியால் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதே சமயம், தக்காளி பயிரை கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயிரிட்டு பழகி விட்டோம்.ஒருமுறை கைவிட்டாலும், மறுமுறை நல்ல விலை கிடைத்து கை துாக்கி விடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. அதன் அடிப்படையில், அடுத்த சாகுபடியை நம்பிக்கையுடன் துவங்கியுள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X