'வாட்ஸ் ஆப்'ல் திருப்புதல் தேர்வு

Added : ஜன 19, 2022
Advertisement
உடுமலை : உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போதைய சூழலில், நேரடி வகுப்புகள் தடைபட்டுள்ளதால், கல்வித்தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதேநேரம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால்,
 'வாட்ஸ் ஆப்'ல் திருப்புதல் தேர்வு

உடுமலை : உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போதைய சூழலில், நேரடி வகுப்புகள் தடைபட்டுள்ளதால், கல்வித்தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதேநேரம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், சில பள்ளிகளில், 'வாட்ஸ்ஆப்' குழு வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும், 10, 11 மற்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏற்கனவே பாட வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி, நேற்று முதல் திருப்புதல் தேர்வு நடத்த இருந்தது.ஆனால், பள்ளிகள் செயல்படாததால், தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக தேர்வுக்கு உரிய ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.சில பள்ளிகளில், 'வாட்ஸ்ஆப்' குழு வாயிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வினாத்தாள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 'வாட்ஸ்ஆப்' குழுவில் பதிவிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்து, மதியம், 1:30 முதல், மாலை, 4:30 மணிக்குள் தேர்வு எழுதுகின்றனர்.பின், விடைத்தாளை போட்டோ எடுத்து, பி.டி.எப்., பைலாக, மாலை, 6:00 மணிக்குள், பாட ஆசிரியரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தனித்தனியாக அனுப்பி வைக்கின்றனர்.

குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில், மாணவர்களை பள்ளிக்கு நேரடியாக வரவழைத்து, ஆசிரியர்களிடம் விடைத்தாள்களை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X