நாணயங்கள் சேகரிக்கும் மாணவி: முதல்வரிடம் ஒப்படைக்க ஆசை

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (1)
Advertisement
பொள்ளாச்சி : 'பழங்கால நாணயங்கள் குறித்து, அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனது கனவாகும்,' என, நாணயம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவி தெரிவித்தார்.பொள்ளாச்சி கந்தசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன், ரஞ்சிதா தம்பதியின் மகள் மிருதுளா. இவர், பி.கே.டி., மெட்ரிக் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது
 நாணயங்கள் சேகரிக்கும் மாணவி: முதல்வரிடம் ஒப்படைக்க ஆசை

பொள்ளாச்சி : 'பழங்கால நாணயங்கள் குறித்து, அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனது கனவாகும்,' என, நாணயம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவி தெரிவித்தார்.

பொள்ளாச்சி கந்தசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன், ரஞ்சிதா தம்பதியின் மகள் மிருதுளா. இவர், பி.கே.டி., மெட்ரிக் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் நாணய சேகரிப்பில் ஆர்வம் கொண்டு, நாணயங்களை, 'பொக்கிஷம்' ஆக சேகரித்து வருகிறார்.மன்னர் காலத்து நாணயங்கள், சத்ரபதி சிவாஜி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற பலரது உருவப்படங்கள் பொறித்த நாணயங்கள், என, பல்வேறு வகையான நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்துள்ளார்.

சுதந்திரத்துக்கு முன் வெளியிட்ட நாணயங்கள் முதல், தற்போதைய நாணயங்கள் வரை சேகரித்து, பாதுகாத்து வருகிறார்.நாணயங்களை பாதுகாப்பாக, 'போட்டோ பிரேம்' செய்து வைத்துள்ளார். பெற்றோரும், மாணவியின் ஆர்வத்துக்கு தடை போடாமல் துணையாக நின்று உதவுகின்றனர்.

மாணவி கூறியதாவது:நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாணய சேகரிப்பில் ஈடுபட தந்தை ஆர்வம் காட்டுவார்; அவரை கண்டு எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாணயமும் அதற்கான வரலாற்றை நமக்கு உணர்த்துகின்றன. இதனை சேகரிக்கும் போது, நமது வரலாற்றை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.

தொடர்ந்து, பெற்றோர் உதவியுடன் நாணய சேகரிப்பில் ஈடுபட்டுள்ளேன். இது எனக்கு மன மகிழ்ச்சியை அளிக்கிறது. சேகரித்த பழங்கால நாணயங்களை, முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்து, நாணயங்கள் பாதுகாப்பு, பழங்கால நாணயங்கள் சேகரிப்பின் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து, பழங்கால வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரை சந்தித்து வலியுறுத்துவது எனது கனவாகும். முதல்வரை சந்திக்க நேரம் கிடைத்தால் இந்த நாணயங்களோடு சென்று கோரிக்கையை தெரிவிப்பேன்.இவ்வாறு, மாணவி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-ஜன-202208:30:39 IST Report Abuse
Barakat Ali கட்சிக்கு நிதி கொடுக்கிறதா இருந்தா உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் தாயி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X