பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: முதல்வர்| Dinamalar

பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: முதல்வர்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (10) | |
சென்னை:பருத்திநூல் விலையை கட்டப்படுத்து வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: ஊக வணிகத்தை தவிர்ப்பதற்காக பருத்தி விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர்

சென்னை:பருத்திநூல் விலையை கட்டப்படுத்து வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news



கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: ஊக வணிகத்தை தவிர்ப்பதற்காக பருத்தி விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டங்களில் 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவு படுத்த வேண்டும். பருத்தி விலை உயர்வினால் நாடு முழுவதும் வேலையின்மை தொழில் துறை அமைதியின்மை ஏற்படும்.


latest tamil news


பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால்ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டுஉபயோக ஜவுளி உற்பத்தி தொழிலகங்கள் இயங்குவது சாத்தியமற்றதாகி விடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X