ஏர்டெல் சேவை முடக்கம்

Added : ஜன 19, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை ; தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏர்டெல் மொபைல் மற்றும் டேட்டா சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. தொலை தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், மொபைல் மற்றும் டேட்டா சேவை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சேவையை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இந்நிறுவனத்தின் சேவை, நேற்று பிற்பகல் முதல் திடீரென முடங்கியது.இது குறித்து, ஏர்டெல்

சென்னை ; தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏர்டெல் மொபைல் மற்றும் டேட்டா சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

தொலை தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், மொபைல் மற்றும் டேட்டா சேவை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சேவையை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இந்நிறுவனத்தின் சேவை, நேற்று பிற்பகல் முதல் திடீரென முடங்கியது.

இது குறித்து, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூறியதாவது:ஏர்டெல் மொபைல் சேவையில், திடீர் பாதிப்பு ஏற்பட்டது. வெளி அழைப்புகள் மற்றும் உள் அழைப்புகள் ஏதும் கிடைக் கவில்லை. சிக்னல் இருந்தாலும் இணைய சேவை கிடைக்கவில்லை. நேற்று பிற்பகல் முதல், இரவு வரை, இந்த பிரச்சினை நீடித்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏர்டெல் அதிகாரிகள் கூறியதாவது:

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மொபைல் போன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. அது, உடனடியாக சரிசெய்யப்பட்டு, மீண்டும் சேவை வழங்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜன-202206:02:40 IST Report Abuse
Girija இன்று காலைவரை உத்திரவாதம் அளிக்கப்பட்ட டாட்டா வேகம் மற்றும் அழைப்புகள் சேவை சரிசெய்யப்படவில்லை . சேவை பாதிப்பை மூடி மறைத்தனர். இது பற்றி பொதுமக்கள் TRAI இல் புகார் அளிக்க வழியில்லை.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
20-ஜன-202204:48:54 IST Report Abuse
N Annamalai ஒரு நாள் நிறுத்தலாம் .
Rate this:
Cancel
20-ஜன-202200:21:57 IST Report Abuse
சி சொர்ணரதி 4மணி நேரமாக வரவில்லை, ஏர்டெல் 4மணி சற்று நேரமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X