எக்ஸ்குளுசிவ் செய்தி

சோனியா புத்தகத்தை வெளியிட தமிழக காங்.,கிரசார் தயக்கம்

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 19, 2022 | கருத்துகள் (6)
Advertisement
காங்., தலைவர் சோனியா எழுதிய விவசாயிகள் தொடர்பான புத்தகங்களை, ஹிந்தி மொழியில் வெளியிட, தமிழக காங்., கட்சியினர் தயங்குவதால், காங்., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.சமீபத்தில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விவசாயிகள், பணவீக்கம், வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி,
சோனியா புத்தகம், தமிழக காங்., தயக்கம்

காங்., தலைவர் சோனியா எழுதிய விவசாயிகள் தொடர்பான புத்தகங்களை, ஹிந்தி மொழியில் வெளியிட, தமிழக காங்., கட்சியினர் தயங்குவதால், காங்., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
சமீபத்தில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விவசாயிகள், பணவீக்கம், வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து, புத்தகங்களை வெளியிட காங்., முடிவு செய்துள்ளது.


அதன்படி, முதற்கட்டமாக, தேர்தல் நடக்கும் மாநிலங்களில், விவசாயிகள் குறித்து காங்., தலைவர் சோனியா எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்த புத்தகங்களை தமிழகத்தில் வெளியிடவும், காங்., தலைமை விரும்புகிறது. எனினும், அவை ஹிந்தி மொழியில் உள்ளதால், அதை வெளியிட, தமிழக காங்., கட்சியினர் விரும்பவில்லை. இதனால், காங்., தலைமை அதிருப்தியில் உள்ளது.
ஹிந்தி மொழியை புறக்கணிக்கும் தமிழக காங்., தலைவர்கள், அந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
21-ஜன-202210:47:20 IST Report Abuse
Indhuindian யாருப்பா அது காங்கிரெஸ்ல அதுவும் தமிஷக காங்கிரெஸ்ல முதுகெலும்பு இருக்கற ஆசாமி கொஞ்சம் தைரியம் இருந்தா கைய தூக்குங்க பாக்கலாம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-202208:59:56 IST Report Abuse
Bhaskaran Maathaaji tamililum munaivarpattam vaangidalaam tamilnaattil yaar yaarukum munaivarpattam tharraanga
Rate this:
Cancel
20-ஜன-202217:06:56 IST Report Abuse
theruvasagan விவசாயத்தை பத்தி புக் எழுதற அளவுக்கு அப்பா டக்கரா மணிமேகலை. சொல்லவே இல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X