காங்., தலைவர் சோனியா எழுதிய விவசாயிகள் தொடர்பான புத்தகங்களை, ஹிந்தி மொழியில் வெளியிட, தமிழக காங்., கட்சியினர் தயங்குவதால், காங்., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
சமீபத்தில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விவசாயிகள், பணவீக்கம், வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து, புத்தகங்களை வெளியிட காங்., முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக, தேர்தல் நடக்கும் மாநிலங்களில், விவசாயிகள் குறித்து காங்., தலைவர் சோனியா எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்த புத்தகங்களை தமிழகத்தில் வெளியிடவும், காங்., தலைமை விரும்புகிறது. எனினும், அவை ஹிந்தி மொழியில் உள்ளதால், அதை வெளியிட, தமிழக காங்., கட்சியினர் விரும்பவில்லை. இதனால், காங்., தலைமை அதிருப்தியில் உள்ளது.
ஹிந்தி மொழியை புறக்கணிக்கும் தமிழக காங்., தலைவர்கள், அந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE