விமானத்தில் வந்த பயணி மாரடைப்பால் மரணம்

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை:துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம், 100க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பஷீர் அகமது, 50 என்பவர் பயணித்தார்.விமானம் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி
 விமானத்தில் வந்த பயணி மாரடைப்பால் மரணம்

சென்னை:துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம், 100க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பஷீர் அகமது, 50 என்பவர் பயணித்தார்.விமானம் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் அவருக்கு முதலுதவி வழங்கியதோடு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.விமானம் நேற்று காலை 4:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும், பஷீர் அகமதுவை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
ஆனால், அவர் இருக்கையில் சாய்ந்தவாறு உயிரிழந்தது தெரிய வந்தது. மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினர். சென்னை விமான நிலைய போலீசார், பஷீர் அகமது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், நாகப்பட்டினத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD - Mississauga,கனடா
21-ஜன-202201:36:12 IST Report Abuse
KayD இவர் wheelchair ல தான் இருக்கார் அப்போ அவருக்கு ஏற்கனவே ஏதோ pre medical conditions இருந்து இருக்கு. ஹார்ட் patient aa இருந்து விமான பயணம் பண்ணி இருந்தார் என்றால் தப்பு அவர் மேல தான். யார் போற சமயம் யாருக்கும் தெரியாது. அவர குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
20-ஜன-202217:20:07 IST Report Abuse
sridhar எவ்வளவு கனவுகளோடு அவரது குடும்பம் அவரை எதிர்பார்த்திருக்கும் ஆத்ம ஷாந்தி அடையட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X