மழையின்றி காயும் மானாவாரி பயிர்கள்

Added : ஜன 20, 2022 | |
Advertisement
கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரிப் பயிர்கள் மழையின்றி காய்ந்து வருகின்றன.கள்ளிமந்தயம், பொருளூர், அப்பியம்பட்டி நால்ரோடு, தும்மிச்சிபாளையம், பெருமாள் கவுண்டன் வலசு, பாலப்பன்பட்டி கிராமப் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை பயன்படுத்தி இந்த நிலங்களில் சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு
 மழையின்றி காயும் மானாவாரி பயிர்கள்

கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரிப் பயிர்கள் மழையின்றி காய்ந்து வருகின்றன.கள்ளிமந்தயம், பொருளூர், அப்பியம்பட்டி நால்ரோடு, தும்மிச்சிபாளையம், பெருமாள் கவுண்டன் வலசு, பாலப்பன்பட்டி கிராமப் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை பயன்படுத்தி இந்த நிலங்களில் சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டனர்.பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில், தற்போது மழையின்றி காய்ந்து வருகின்றன.பாலப்பம்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக வெள்ளைச் சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது இப்பயிரும் மழை இல்லாததால் வளரும்முன் காய்ந்து வருகிறது. இவற்றிலிருந்து சோளக் கதிர்கள் முதிர்வடைய வாய்ப்பில்லை. கால்நடைகளுக்கு தீவனமாக மட்டுமே பயன்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X