தி.மு.க., மா.செ.,க்களுக்குள் நடக்குது 'மறைமுக யுத்தம்'

Added : ஜன 20, 2022 | |
Advertisement
மதுரை : 'மதுரையில் நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையிலும் ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்களுக்குள் கட்சி ரீதியாக நடக்கும் மறைமுக யுத்தத்தால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமே' என்ற அச்சத்தில்கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவுள்ள நிர்வாகிகள் புலம்புகின்றனர்.நகர் வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்,தெற்கு மாவட்டங்களுக்கு முறையே முன்னாள் அமைச்சர்


மதுரை : 'மதுரையில் நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையிலும் ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்களுக்குள் கட்சி ரீதியாக நடக்கும் மறைமுக யுத்தத்தால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமே' என்ற அச்சத்தில்கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவுள்ள நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

நகர் வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்,தெற்கு மாவட்டங்களுக்கு முறையே முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., தளபதி, அமைச்சர் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர்.நகர் தெற்கு பொறுப்பாளரான தளபதி தனது செல்வாக்கால் சட்டசபை தேர்தலில் வடக்கு பொறுப்பாளர் பொன்முத்துராமலிங்கத்துக்கு கீழ் உள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இருவருக்கும் 'மறைமுக யுத்தம்' நிலவுகிறது

. இவர்களின் ஆதரவாளர்களும் பிரிந்தே அரசியல் செய்கின்றனர்.இருவரின் எல்லைக்கு உட்பட்டு 75 வார்டுகள்உள்ளன. இவர்கள் மறைமுக யுத்தத்தால் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவுள்ள நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.அமைச்சர் மூர்த்திக்கும், மணிமாறனுக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன் இருந்த புரிந்துணர்வு தற்போது இல்லை. தனித்தனியாக பல நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருந்து அவர்களுக்குள் ஒற்றுமையில்லாததை அறியலாம்.

இவர்கள் எல்லைக்குள் 25 மாநகராட்சி வார்டுகள்உள்ளன. இந்தவார்டுகளில் போட்டியிடும் நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: தளபதி தன் மகளுக்கு மேயர் பதவி எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் மகள் வசிப்பது தெற்கு மாவட்டம்.மணிமாறன் தான் சிபாரிசு செய்ய வேண்டும். அமைச்சர் என்பதால் மூர்த்தி ஆதரவாளர்கள் நகர் வடக்கு, நகர் தெற்கு எல்லைக்குள் உள்ள வார்டுகளில் போட்டியிட தயாராகின்றனர். சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பது கடினம். இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது மதுரை தி.மு.க.,விற்கு பெரும்சவாலாக இருக்கும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X