ஆம்னி பஸ்கள்: ரூ.11 லட்சம் அபராதம்

Added : ஜன 20, 2022 | |
Advertisement
சென்னை:பொங்கல் பண்டிகை கூட்டத்தை சாதகமாக்கி, விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து, 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை கூட்டத்தை பயன்படுத்தி, நான்கு நாட்களாக ஆம்னி பஸ்கள் கடுதல் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டன. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள், 12 குழுக்களாக தமிழகம் முழுதும் சோதனை

சென்னை:பொங்கல் பண்டிகை கூட்டத்தை சாதகமாக்கி, விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து, 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கூட்டத்தை பயன்படுத்தி, நான்கு நாட்களாக ஆம்னி பஸ்கள் கடுதல் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டன. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள், 12 குழுக்களாக தமிழகம் முழுதும் சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் வரை, 250க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், அதிக கட்டணம் வசூலித்ததுடன், உரிமம் இன்றியும், வரி செலுத்தாமலும் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்த அதிகாரிகள், 11 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலித்தனர்.இந்த சோதனையை இன்றும் தொடர போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X