அரசு வேலை என ஆசை காட்டும் கும்பல் உஷாராக இருக்க போலீசார் அறிவுரை

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை:'போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடிக்கு வலை குறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.1.50 கோடி மோசடி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் அளித்துள்ள புகார் மனு: மதுரை, கோவை, சேலம்,

சென்னை:'போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடிக்கு வலை குறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.


1.50 கோடி மோசடி


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் அளித்துள்ள புகார் மனு: மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு கும்பல், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்கள் வழங்கி, போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில், மர்ம கும்பல், திருப்பத்துார் அருகே போலியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
தனிப்படை போலீசார் விரைந்து சென்று, திருப்பத்துாரைச் சேர்ந்த சூர்யா, 25 உட்பட எட்டு பேரை கைது செய்தனர். இந்த கும்பல், 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.இந்த கும்பலை போலவே, மேலும் சிலர் தமிழகத்தின் பல பகுதிகளில் போலியாக நேர்முக தேர்வு நடத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.


எச்சரிக்கை

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, நேர்முக தேர்வு நடத்துவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம், ரொக்கமாகவோ, வங்கி மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம்.
அரசு மற்றும் தனியார் துறைகளில், பணம் கொடுத்து தான் வேலை வாங்க வேண்டும் என்று கூறுவோர் குறித்து, அவசர போலீஸ் எண். 100 மற்றும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
20-ஜன-202217:37:46 IST Report Abuse
R.RAMACHANDRAN லஞ்சம் கொடுத்து அரசு பணிகளில் சேர முயல்பவர்களுக்கு அவர்கள் எங்கு பணத்தை இழந்தால் என்ன என காவல் துறை இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X