திருநெல்வேலி:பாரதியின் 125வது திருமண நாளில், அவரது மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில், செல்லம்மாள் பாரதி மையம் திறக்கப்படுகிறது.
சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் முரளிதரன். சேவாலயா தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் தன் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக, 2 கோடி ரூபாய் செலவில் பாரதி நுாலகம், கூட்ட அரங்கத்துடன் கூடிய செல்லம்மாள் பாரதி மையத்தை அமைக்கிறார்.
ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்த அரசு நுாலக கட்டடத்தை இடித்து விட்டு, புதிய வளாகம் கட்டப்படுகிறது. ஜூன் 27 பாரதியின் 125வது திருமண நாள். கட்டடம் முடித்து, பாரதி,- செல்லம்மாள் சிலையையும் அங்கு நிறுவுகிறார். ஜூன் 27ல் திறப்பு விழா நடக்கிறது. நேற்று கடையத்தில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முரளிதரன் வரவேற்றார். சேவாலயா அறங்காவலர் நாராயணன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE