ரூ.480 கோடி வங்கி கடன் பாக்கி: பிரபல கடை சொத்துகள் 'ஜப்தி'

Added : ஜன 20, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை:இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி தி.நகரில் 'சரவணா ஸ்டோர்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 'ஜப்தி' செய்யப்பட்டன.சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் 'சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்' என்ற நகைக் கடையை நடத்தி வந்தவர் பல்லக்குதுரை 54. அதே பகுதியில் ரங்கநாதன் தெருவில் பிரமாண்டமான கட்டடத்தில் ஜவுளி கடையையும்
 ரூ.480 கோடி வங்கி கடன் பாக்கி: பிரபல கடை சொத்துகள் 'ஜப்தி'

சென்னை:இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி தி.நகரில் 'சரவணா ஸ்டோர்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 'ஜப்தி' செய்யப்பட்டன.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் 'சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்' என்ற நகைக் கடையை நடத்தி வந்தவர் பல்லக்குதுரை 54. அதே பகுதியில் ரங்கநாதன் தெருவில் பிரமாண்டமான கட்டடத்தில் ஜவுளி கடையையும் நடத்தி வந்தார்.இவர் உடல் நலக்குறைவு காரணமாக 2021 ஜூலை மாதம் இறந்து விட்டார். கடையை மனைவி சுஜாதா மகன் சர்வன் நிர்வாகம் செய்கின்றனர்.

கடைகளின் கண்காணிப்பு பொறுப்பை உறவினர் கணேஷ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். தொழிலை விரிவுப்படுத்த பல்லக்குதுரை 2017ல் எழும்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 250 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்கு அடமானமாக உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளின் சொத்து ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. வட்டியுடன் சேர்த்து பல்லக்குதுரை 480 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் பல முறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். பல்லக்குதுரையால் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வங்கி அதிகாரிகள் 2020ல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் கடனை திருப்பி செலுத்த அவகாசம் வழங்கியது. விசாரணைக்கு பின் 2021 டிசம்பரில் கடன் தொகைக்கு அடமானமாக அளித்த ஆவணங்களுக்குரிய சொத்துக்களை 'ஜப்தி' செய்ய உத்தரவிட்டது.

இப்பணிக்காக வழக்கறிஞர் துரியன் என்பவரை நியமனம் செய்தது.இவர் ஜப்தி நடவடிக்கை குறித்து பல்லக்குதுரை குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வாயிலாக அறிவித்தார். நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் உதவியுடன் நேற்று காலை மேற்கண்ட சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.உஸ்மான் சாலையில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் என்ற நகைக்கடை ஏற்கனவே காலியாகத் தான் இருந்தது;

தற்போது கட்டடம் மட்டுமே உள்ளது. ஆனால் ரங்கநாதன் தெருவில் உள்ள கடையில் நான்கு மாடிகளில் ஜவுளிகள் 'ரெடிமேட்' ஆடைகள் இருந்தன.இந்த கடைக்கு அருகே பல்லக்குதுரைக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அங்கு ஜவுளி துணிகள் உள்ளிட்ட பொருட்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
சொத்துக்களை ஜப்தி செய்த பின் கட்டடங்களுக்கான சாவிகள் இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் ரத்னம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
22-ஜன-202213:27:23 IST Report Abuse
shakti ஹோட்டல் சரவணபவன் மாதிரி இந்த சரவணா ஸ்டோர்ஸையும் "ஓங்கோல் கும்பல் " கைப்பற்ற வாய்ப்பு உள்ளது ...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஜன-202205:19:42 IST Report Abuse
J.V. Iyer இவர்களும் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லையா? ஆச்சர்யமாக உள்ளது. இவர்கள்மீது மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் நல்லது.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
23-ஜன-202205:58:19 IST Report Abuse
RaajaRaja Cholanஎன்ன தண்டனை , அது தான் அசலுக்கு வட்டிக்கும் ஈடாக சொத்துக்களை ஜப்தி செய்தாகி விட்டது , பிறகு என்ன . கடுமையான தண்டனை என்றால் ,...
Rate this:
Cancel
RG RG - Chennai,இந்தியா
21-ஜன-202200:46:55 IST Report Abuse
RG RG ஒரு காலத்துல என்ன கூட்டம் , என்ன வியாபாரம் .. நம்ம நாட்ல யாரு தான் சார் நல்ல இருக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X