இது உங்கள் இடம்: மூக்கை உடைத்து கொள்ளாதீர்!

Updated : ஜன 20, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்கே.மூர்த்தி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உ.பி.,- - பா.ஜ., முதல்வர் ஆதித்யநாத் அகராதியில், 'பிராமணர்' என்றால் ஜாதி கிடையாது; அது கற்றறிந்த சமூகம். மேலும் உ.பி.,யில், 80 சதவீத வாக்காளர்கள் தேசியவாதிகள், 20 சதவீத பேர் தேச விரோதிகள்.இங்கு தற்செயலான விஷயம் என்னவென்றால்,






உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்




latest tamil news


கே.மூர்த்தி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உ.பி.,- - பா.ஜ., முதல்வர் ஆதித்யநாத் அகராதியில், 'பிராமணர்' என்றால் ஜாதி கிடையாது; அது கற்றறிந்த சமூகம். மேலும் உ.பி.,யில், 80 சதவீத வாக்காளர்கள் தேசியவாதிகள், 20 சதவீத பேர் தேச விரோதிகள்.
இங்கு தற்செயலான விஷயம் என்னவென்றால், உ.பி., மக்கள் தொகையில், 19.26 சதவீத மக்கள் முஸ்லிம்கள்' என. காங்., 'மாஜி' அமைச்சர் ப.சிதம்பரம் அங்கலாய்த்து இருக்கிறார். உ.பி.,யில் உள்ள வாக்காளர்களில், 80 சதவீதம் பேர் தேசியவாதிகள்; 20 சதவீதம் பேர் தேசவிரோதிகள் என்று தான், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி இருக்கிறார்.


latest tamil news


இந்த, 80 : 20 விழுக்காட்டில் எந்த இடத்திலும் முஸ்லிம்களைப் பற்றி, யோகி ஆதித்யநாத் குறிப்பிடவேயில்லை.அவர் குறிப்பிட்ட, 80 சதவீத தேசியவாதிகளில் முஸ்லிம்களும் இருக்கக் கூடும்; 20 சதவீத தேசவிரோதிகளில் பிற சமூகத்தினரும் இருக்க கூடும். ப.சிதம்பரம் உச்ச நீதிமன்ற வக்கீலாயிற்றே... தொழில் புத்தி சும்மா இருக்குமா?'

உ.பி.,யில் வாழும் முஸ்லிம்கள், 19 சதவீதத்தினரும் தேசவிரோதிகள்' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி இருப்பதாக வர்ணித்து, சாமர்த்தியமாக ஒரு அறிக்கை மூலம் கலாய்த்திருக்கிறார். நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும், காங்கிரஸ் பற்றியும், ப.சிதம்பரம் உட்பட அதை வழி நடத்தி செல்லும் அரசியல்வாதிகளை பற்றியும் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளனர்.

அதனால், இப்படி சொல்லாத விஷயத்தை சொன்னதாக கூறி, முஸ்லிம் மக்களின் மனதில் நஞ்சை விதைத்து, உ.பி., சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூடுதலாக ஒரு ஓட்டுக் கூட பெற்று விட முடியாது.முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்லிவிடவில்லை. 'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்' என்ற குறளில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொன்னதை தான் சொல்லி இருக்கிறார்.

அதாவது, 'அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும், அவர் அந்தணர் எனப்படுவார்' என அர்த்தம். இந்த உரை எழுதியது, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.எனவே ப.சிதம்பரம் அவர்களே... சிண்டு முடிய முயன்று மூக்கை உடைத்து கொள்ளாதீர்!

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M G.சக்கரவர்த்தி தொழில் புத்தி சும்மா இருக்குமா என்று மாஜிநிதியமைச்சரை ஏளனப்படுத்தி எழுதக்கூடாது.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
21-ஜன-202201:05:15 IST Report Abuse
Sai அதாவது, 'அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும், அவர் அந்தணர் எனப்படுவார்' என அர்த்தம். இந்த உரை எழுதியது, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. சொல்லாது விடுத்தது 'அந்தணர் என்பது ஒரு இனம் அல்ல அப்படிப் பட்டவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்'
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-ஜன-202200:39:53 IST Report Abuse
DARMHAR சிதம்பரத்துக்கு அவர் மகனுக்கும் அவ்வப்போது வால் அறுபட்ட நரி போல ஏதாவது ஊளை இட்டுக்கொண்டு இல்லாமல் போனால் அவர்களுக்கு இரவில் தூக்கம் பிடிக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X