யானைக்கவுனி--''யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தாமதமானது. தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால், வரும் ஜூலைக்குள் முடிவடையும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.சென்னை, யானைக்கவுனி ரயில்வே மேம்பால பணிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி., தயாநிதிமாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.தற்போது நடந்து வரும் மேம்பால பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு, பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அமைச்சர் நேரு கூறியதாவது:யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, கடந்த ஆட்சிக் காலத்தில் தாமதமானது. தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.வரும் ஜூலைக்குள்,யானைக்கவுனி மேம்பால பணிகள் முடிவடையும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, 1,000 கோடி ரூபாயை ஒதுக்கி, பணிகள் நடக்கின்றன.மழை நீர் வடிகால் பணிகளும் நடக்கின்றன. விடுபட்டுள்ள பழைய பணிகள், ஒப்பந்ததாரர்களுடன் பேச்சு நடத்தி, விரைந்து முடிக்கப்படும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு அரசு தேதி கொடுத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, துறைமுகம் தொகுதிக்குட்பட்ட சவுகார்பேட்டை, திருப்பள்ளி தெருவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை, அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.தகன மேடை ஆய்வுதாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளையில் உள்ள எரிவாயு தகன மேடை, விறகு வைத்து எரிக்கும் முறையில் இருந்தது. இதை, எரிவாயு மூலம் உடல்களை தகனம் செய்ய வசதியாக, மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை நேற்று மாலை, அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE